தமிழ் சினிமாவின் என்றும் நினைவில் இடம் பிடிக்கும் அளவிற்கு நடிகர் சிலம்பரசன் கம்பேக் கொடுத்துள்ளார். பல்வேறு மனரீதியான பிரச்சினைகளால் ஷூட்டிங்கை புறக்கணித்து ரெட் கார்ட் வாங்கி மிகவும் தாழ்ந்த நிலைக்கு இழுக்கப்பட்டார். உடல் எடையும் கூடியது, விமர்சகர்கள் உட்பட பலர் சரமாரியாக கலாய்த்தனர். கேலி கிண்டல்கள் காதில் விழுந்ததும் அமைதியாக காத்திருந்து இத்தனை சிக்கல்களையும் தாண்டி அபார கம்பேக் கொடுத்து இன்று பலரின் ரோல் மாடலாக திகழ்கிறார். வாழ்க்கை மறு வாய்ப்புக் கொடுத்தால் சிலம்பரசனைப் போல் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியுள்ளார்.
கொரோனா தொற்று சிறிது குறைந்த வேளையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அதோடு சிம்புவின் சுசீந்திரன் இயக்கத்தில் தாயாரான ஈஸ்வரன் படமும் வந்தது. இப்படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகளும் இல்லை, இதில் சிம்பு உடல் எடையை குறைத்து மட்டுமே பெரிதாக பேசப்பட்டது. அதே ஆண்டு இறுதியில் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த மாநாடு திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபுவின் தரமான ஸ்க்ரீன்பிளே + சிம்புவின் தத்ரூபமான நடிப்பு + யுவன் இசை + …. என அனைவரின் பங்கேற்பும் சிறப்பாக விளங்க படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அதோடு தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ‘ வெந்து தணிந்தது காடு ’ படத்தில் நடித்தார் சிம்பு. மும்பை – கேங்ஸ்டர் கதைக் கருவைக் கொண்ட இப்படம் சுமாரான விமர்சனம் பெற்றாலும் நல்ல வாசூலை ஈட்டியது.
இம்மாதம் இறுதியில் சிம்புவின் அடுத்த படமான ‘ பத்து தல ’ வெளியாகிறது. முஃப்டி படத்தின் ரீமேக்கான இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் சிம்பு தன்னுடைய 48வது படத்தின் அறிவிப்பை வழங்கவுள்ளார்.
சிம்பு 48
வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் சிம்பு பேசிய நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் இன்று டிவிட்டரில் பதிவிட்டு “ பொறுமையாக இருப்பதே அறம். உங்களின் காத்திருப்புக்கு நிச்சயம் நல்ல மதிப்பு இருக்கிறது. ” எனப் போட்டிருந்தார். அந்த வீடியோ காட்சியில் அவர் கூறியதாவது, “ பலரது ஸ்கிரிப்ட்களை கேட்டுள்ளேன். அதில் சில நல்ல கதைகளே நல்ல இயக்குனர்களை கொண்டுள்ளது. நான் காட்டுப்பசியில் கிடக்கிறேன். முன்னர் இது போல் பசி இருந்த போது நானே மன்மதன் படத்தை இயக்கினேன். அது போல் ஒன்றை நான் மீண்டும் உருவாக்க வேண்டும் அல்லது சிறந்த இயக்குனருக்கு கீழ் ஒரு தாரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. காத்திருங்கள் விரைவில் வரும். ”
Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait 🙏🏻#STR48 pic.twitter.com/VqG0NTEtkk
— Silambarasan TR (@SilambarasanTR_) March 7, 2023
இதுவரை கிடைத்த தகவல்கள் என்னவென்றால் சிம்புவின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காம்போ இணைந்துள்ளது. வரலாற்றுக் கதையான இப்படத்தை கமலின் ஆர்.கே.எஃப்.ஐ 100 கோடி முதலீடு செய்து தயாரிக்கிறது. சிம்புவின் முதல் 100 கோடி முதலீடு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.