Sunday, May 5, 2024
- Advertisement -
HomeUncategorizedஉயிருக்கு போராடிய இயக்குனருக்கு உதவிய சிம்பு..ரசிகர்கள் நெகிழ்ச்சி.. விவரம்

உயிருக்கு போராடிய இயக்குனருக்கு உதவிய சிம்பு..ரசிகர்கள் நெகிழ்ச்சி.. விவரம்

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவை பொறுத்தவரை அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட என்பதை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் சிம்பு இயக்குனர் தேசியம் பெரியசாமி இயக்கத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய திரைப்படத்தில் நடிப்பதற்காக இருக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்று சொல்லப்படும் உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது .

இதற்காக நடிகர் சிம்பு ஏற்கனவே நிறைய உடற்பயிற்சிகள் செய்வதாகவும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று ஒரு சில கலைகளைக் கற்றுக் கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

- Advertisement -

இப்படி சினிமாவிற்காத மெருகு ஏத்து பணியில் இருக்கும் நடிகர் சிம்பு ரசிகர்கள் பாராட்டும் வண்ணம் ஒரு செயலை செய்திருக்கிறார் .இந்த ஆண்டு வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இது அறிந்த நடிகர் சிம்பு துணை இயக்குனருக்கு மருத்துவ செலவிற்கு வேண்டிய பணத்தை கொடுத்து உதவி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு ஒரு நல்ல வரவேற்பு பெறவில்லை. இருந்த நிலையிலும் அதனுடைய துணை இயக்குனராக இருந்தாலும் அவருக்கும் நடிகர் சிம்பு தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.

பெரும்பாலும் சினிமாவில் வரும் நடிகர்களை பார்த்து தான் ரசிகர்கள் ஹேர் ஸ்டைல் செய்வது உடைய அணிவது போன்ற பழக்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். அதைவிட முக்கியமான பழக்கம் இது போன்ற நல்ல எண்ணங்கள் தான் ரியல் லைஃபிலும் ஹீரோவாக இருக்கும் இது போன்ற ஹீரோக்களின் நல்ல குணங்களையும் ரசிகர்கள் ரசிப்பதுடன் விடாமல் தன் பழக்கமாக்கிக் கொள்வது சிறந்தது.

அதேபோல் நடிகர் சிம்பு ஒரு தனிமனித வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகர் சிம்பு உடல் எடை பருமன் ஆகி தோற்றம் மாறி இருந்தார். ஆனால் மீண்டும் சினிமாவிற்கு வருவதற்காக தன்னை வருத்திக்கொண்டு உடலை குறைத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

நடிகர் சிம்பு தற்பொழுது இன்னும் தன் உடலை அழகு படுத்திக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகிறார். அது அவருக்கு வெற்றியும் தந்திருக்கிறது. இதன் மூலம் அவருடைய வாழ்க்கையே மாறி இருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்த வண்ணம் இருக்கிறது.ஒருவர் வாழ்க்கை அப்படியே இருந்து விடாது முயற்சி செய்தால் எதையும் மாற்றி விடலாம் என்பதை செயல்படுத்தி காட்டி இருக்கிறார் நடிகர் சிம்பு.

Most Popular