Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் பாணியை கையில் எடுத்த சிம்பு.. புயல் வேகத்தில் போறாரே!

விஜய் பாணியை கையில் எடுத்த சிம்பு.. புயல் வேகத்தில் போறாரே!

நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 48வது திரைப்படத்தை நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் உடைய இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

- Advertisement -

மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பக் கொடுத்த சிம்பு தற்பொழுது சினிமாவில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக தன்னுடைய உடலையும் மனதையும் தயார் செய்து வருகிறார். தாய்லாந்திற்கு சென்று மார்ஷியல் கலைகளைக் கற்று வந்த சிம்பு தன்னுடைய 48வது திரைப்படத்திற்கு தேவையான பயிற்சிகளை செய்வதற்காக லண்டன் சென்றிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று பலரிடம் கேள்வி இருக்கும். இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் கதாநாயகி என திஷா பதானியிடம் இந்தத் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐசரி கணேஷ் நடிகர் சிம்பு ஏற்கனவே எங்களிடம் இரண்டு திரைப்படங்களை நடிப்பதாக கூறியிருந்தார். அதில் ஒன்று வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகம் என்றும் மற்றொன்று கொரோனா குமார் என்ற திரைப்படமும் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் சில பல காரணத்தினால் அந்த திரைப்படங்கள் எடுக்கப்படாமல் போய்விட்டது. இருந்தாலும் 48வது திரைப்படத்தை சிம்பு நடிக்க தொடங்கும் இந்த நேரத்தில் எங்களுக்கு நடித்துக் கொடுப்பதாக கூறிய அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒன்றையாவது நடிகர் சிம்பு நடிக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் ஒரு பஞ்சாயத்தை வைத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்புவினுடைய 49வது திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிம்புவின் உடைய 49 வது திரைப்படத்திற்கு பல இயக்குனர்கள் கதை கூறிய பொழுது அதில் ஒருவருடைய கதை நடிகர் சிம்புவிற்கு பிடித்திருப்பதாகவும் அவர்களுடன் தான் நடிகர் சிம்பு தன்னுடைய அடுத்த திரைப்படத்தை நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எல்லாம் நடிகர் சிம்பு லண்டனில் இருந்து இந்தியா வந்த பிறகு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Most Popular