சினிமா

சிம்பு 3.0 பார்க்க ரெடியா.. 48 நாளில் 189 கிமீ .. மீண்டும் உடலை மாற்றினார்

சில நாட்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் நடிகர் சிம்பு. அந்த நாட்களில் நடிகர் சிம்புவிற்கு உடல் பருமன் ஏற்பட்டது. ஆனால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் கொடுப்பதற்காக நடிகர் சிம்பு கடின உழைப்பினை மேற்கொண்டார். அவருடைய முயற்சியால் தன் உடலை மீண்டும் கட்டுக்கோப்பாக்கி ஈஸ்வரன், மாநாடு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அதிலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்தத் திரைப்படத்தில் நடிகர் சிம்பு மன்மதன் வல்லவன் போன்று திரைப்படத்தில் இருப்பது போன்ற உடலமைப்பின் இருந்தார். அதேபோல் தற்பொழுது நடித்திருக்கும் பத்து தல திரைப்படத்திலும் நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடை ஏறாமல் பாதுகாத்து நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் அது குறித்த எந்த புகைப்படமும் வேறு எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் இவர் தாய்லாந்துக்கு எதற்காக சென்று இருக்கிறார் என்று கேள்வி இருந்து வந்தது.

Advertisement

இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் நடிகர் சிம்பு தன்னுடைய ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
இப்படி அவர் என்ன பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்றால் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களிலும் நடிகர் சிம்பு தீவிரமான உடல் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற செய்தியை ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

டிசம்பர் மாதம் பதினோரு நாட்கள் 996 நிமிடம் 24 முறை உடற்பயிற்சி செய்திருக்கிறார் .51 கிலோ மீட்டர் இடைவெளியில் நடைப்பயிற்சி செய்திருக்கிறார். இதன் மூலம் இவர் 5499 கலோரிஸ் குறைத்திருக்கிறார்.
ஜனவரி மாதம் 27 நாட்கள் 5973 நிமிடங்கள் 161 முறை உடற்பயிற்சி செய்திருக்கிறார். 157 கிலோ மீட்டர் இடைவெளியில் நடை பயிற்சி செய்திருக்கிறார். அந்த மாதம் இவர் 29435 கலோரிஸ் குறைத்திருக்கிறார்.

மீண்டும் பிப்ரவரி மாதம் 18 நாட்கள் 3603 நிமிடங்கள் என்பது முறை உடற்பயிற்சி செய்திருக்கிறார். முப்பத்தி இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் நடை பயிற்சி செய்திருக்கிறார். இதனால் 14, 849 கலோரிஸ் குறைத்திருக்கிறார்
என்ற பதிவினை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் சிம்பு இதன் மூலம் இவர் தன்னுடைய அடுத்த படத்திற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.இதனால் இவரிடையே ரசிகர்கள் இந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top