Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசைரன் படம் எப்படி இருக்கு? வெற்றிபெற்றாரா ஜெயம் ரவி?

சைரன் படம் எப்படி இருக்கு? வெற்றிபெற்றாரா ஜெயம் ரவி?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அகிலன், இறைவன் போன்ற இரண்டு திரைப்படங்களும் நடிகர் ஜெயம் ரவிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த பெயரை அந்த இரண்டு படங்களும் ஈடு செய்யவில்லை.

- Advertisement -

இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது இவர் நடித்திருக்கும் சைரன் திரைப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. திரைப்படத்தின் வெற்றியை கருத்தில் கொண்டு பொறுப்புடன் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த சைரன் திரைப்படத்தைப் பற்றிய ஒரு விமர்சனமும் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி திலகவருமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவார். அப்படி அவர் ஆம்புலன்ஸ் ஓட்டும்பொழுது அவர் மீது ஒரு தவறான பதிவு செய்யப்படுகிறது .அதன் காரணத்தினால் ஆயுள் தண்டனை கைதியாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். பல ஆண்டுகள் தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. இப்படி காத்திருந்து தன்னுடைய பகைவர்களை திலகவர்மன் எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் கதை ஆகும்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் உடைய வசனங்களும் உணர்ச்சி பூர்வமான நடிப்பும் திறப்பாக அமைந்திருக்கிறது .மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சின்சியரான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் சிறையில் இருக்கும் ஒரு கைதியின் கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறார்.

இவருக்கும் நடிகர் ஜெயம் ரவிக்கும் இடையில் எதிரும் புதிரும் ஆன கதைக்களம் அமைந்திருக்கிறது . ஜெயம் ரவியின் குணமும் இருவருடைய குணமும் ஒரே மாதிரி இருப்பதால் எலியும் பூனையும் போல இவர்கள் பேசிக்கொள்வதும் இவர்கள் வரும் காட்சியும் அமைந்திருப்பது சுவாரசியமாக இருக்கிறதாம் .

அதேபோல் இந்த திரைப்படத்தின் கூடுதல் பிளஸ் என்றால் நடிகர் யோகி பாபு தான் .நடிகர் யோகி பாபுவும் ஜெயம் ரவியும் இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு ஒரு வரியில் பேசும் காமெடிகள் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

திரைப்படத்தின் முதல் பாதி யோகி பாபுவும், ஜெயம் ரவியின் உடைய நகைச்சுவையும், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவியின் எதிர்மறையான சுவாரசியமான விவாதங்களும் ஆகும். இரண்டாம் பாதி திலகவருமனான ஜெயம் ரவியின் ஆயுள் தண்டனை பெறுவதற்கு முன்பு உள்ள பாஸ்ட் லைஃப் ஸ்டோரி மற்றும் அவர் ஆயுள் தண்டனை பெறுவதற்கு காரணமான நபர் யார் என்பதை கூறும் கதையாகும் ஆகும் .

மேலும் திரைப்படத்தில் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் மாசான என்டர்டைன்மெண்டையும் ,ஆக்சன், காமெடி ,சென்டிமென்ட் என எல்லா விதத்திலும் ரசிகர்களை திருப்தி செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .

அதேபோல் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இந்த திரைப்படத்தில் புதுமையான முறையில் மாசான என்டர்டைன்மெண்டை படமாக்கி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular