Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅட என்னயா தலைப்பு இது.. ! லீக்கானது சூர்யா 42 படத்தின் டைட்டில்.. !

அட என்னயா தலைப்பு இது.. ! லீக்கானது சூர்யா 42 படத்தின் டைட்டில்.. !

இயக்குனர் சிவா தலைமையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, திஷா பத்தானி மற்றும் பலர் ஓர் வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். விஜய்யின் லியோ, பொன்னியின் செல்வன் மற்றும் பிற பெரிய திரைப்படங்களை விட சூர்யாவின் இந்தப் படமே வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

3டி – யில் 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. சூர்யா போர்வீரனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு பிரம்மாண்ட செட்கள் அமைத்து ஷூட்டிங் செய்யப்பட்டு வருகிறது. கூடவே வெளிநாட்டில் இருந்து வி.எஃப்.எக்ஸ் வல்லுனர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு படத்தின் அறிவிப்புக்குப் பின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதன் பிறகு இந்தப் படிராதுன் எந்த வித அப்டேட்டும் வெளியாகவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வேகத்தில் சென்ற மாதம் 3வது வாரத்தில் டீஸர் ஷூட்டிங்கை முடித்தது. சூர்யா 42 தலைப்பு மற்றும் ரீலீஸ் தேதி அறிவிப்பு ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9:05 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டது படக்குழு.

- Advertisement -

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே சமூக வலைதளங்களில் ‘ அக்னீஸ்வரரன் ’ எனும் தலைப்பு வதந்திகளாக பரவின. டீஸர் ஷூட்டிங் முடிக்கப்பட்டு சென்சாருக்கு அனுப்பப்பட்ட டீசரின் சான்றிதழ் தற்போது வெளியாகியது. அதில் படத்தின் தலைப்பு ‘ காங்குவா ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சூர்யா 42 படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு.

- Advertisement -

மேலும் டீசரின் நீளம் 1 நிமிடம் 16 விநாடிகள் ஆகும். படத்தை எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்களோ அதே அளவு விளம்பரத்திலும் கவன செலுத்துகின்றனர். அறிவிப்பு தினமான நாளை காலை அனைத்து பத்திரிக்கைகளிலும் காங்குவா படத்தின் போஸ்டர் பெரிதாக அச்சிடுகின்றனர். அதோடு டி.வி சேனல்களில் முழு டீஸர் ஒளிபரப்பப்படவுள்ளது.

காங்குவா என்றால் என்ன ? இது தலைப்பு எதற்கு என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்குவா எனும் வார்த்தை மராத்தி மொழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என ஒரு சிலர் சொல்கின்றனர். ஆனால் தகுந்த வட்டாரங்களில் கிடைத்த செய்து என்ன வென்றால், ஆந்திர பிரதேச மானதில் தலித் சமுதாயத்தால் ஆண்டப்பட்ட கிராமத்தின் பெயரே இது. அதைத் தான் படத்திற்கு வைத்துள்ளனர் என்கின்றனர்.

Most Popular