Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாசிவா மனசுல சக்தியின் 2வது பாகம்- இயக்குனர் ராஜேஷ் அறிவிப்பு

சிவா மனசுல சக்தியின் 2வது பாகம்- இயக்குனர் ராஜேஷ் அறிவிப்பு

நடிகர் ஜீவா திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களில் ஒரு புதுமையான பாதையை அமைந்து ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இயக்குனர் ராஜேஷுக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும்.இந்த படத்தில் அனுசியா அறிமுகமானார். நவநாகரீக தமிழ் சினிமாவுக்கு இந்த படம் முதல் மைல் கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆனது.

- Advertisement -

நடிகர் சந்தானத்திற்கும் இந்த படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு நடிகர் சந்தானம் இது போன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இயக்குனர் ராஜேஷ்  இதே பாணிய ஓகே  ஒகே, பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்றாக படிச்சவங்க என்ற படங்களும் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளார். இது குறித்து பேட்டி அளித்துள்ள இயக்குனர் ராஜேஷ், முதல் பாகத்தில் தொடர்ச்சியாக தான் இரண்டாவது பாகம் அமையும் என்றும் தனி கதையை எடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

படத்தை ஜீவா தான் நடிக்க இருப்பதாகவும் படத்தை தயாரிக்கும் பணியில் ஜீவா மேற்கொள்ள இருப்பதாகவும் இருப்பதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். இந்த படத்திற்கான கதையை தான் எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் படத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் கதை எப்படி தொடர்ச்சியாக எடுக்க முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனர் ராஜேஷ், ஜீவா, சந்தானம் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது இரண்டாவது பாகமும்  பெரிய ஹிட் ஆக அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Most Popular