Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லி ஹிந்திக்கு செல்ல நீங்களே காரணம்.. ஆவேசம் அடைந்த சிவகார்த்திகேயன்!

அட்லி ஹிந்திக்கு செல்ல நீங்களே காரணம்.. ஆவேசம் அடைந்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தெறி ,பிகில் ,ராஜா ராணி ,போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.
இவர் தற்பொழுது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் தன் திறமையை நிலைநாட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஹிந்தியில் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ஷாருக்கானை வைத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்று சாதித்து இருக்கிறார் இயக்குனர் அட்லி.

இந்த வெற்றியை தமிழ் சினிமா துறையை சார்ந்த யாரும் கொண்டாடாமல் இதை காப்பியடித்து இயக்கி இருக்கிறார் அட்டில் என்று குறை கூறுகிறார்கள். இதன் காரணத்தினால் இயக்குனர் அட்லி தமிழில் மீண்டும் திரைப்படங்களை இயக்குவதற்கு தயங்குகிறார்.

- Advertisement -

இதைப் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் பேட்டி ஒன்றில் அட்லீக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அட்லீ உடைய இந்த சாதனையை நாம் இன்னும் கொண்டாடி இருக்க வேண்டும். அட்லி திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் ,என்ஜாய்மென்ட் தான் அதில் அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ் சினிமா துறை இப்படி குறை கூறியிருக்க கூடாது.

- Advertisement -

ஹிந்தியில் ஏற்கனவே இருக்கும் இயக்குனர்கள் யாரும் செய்யாத ஒன்றை அட்லீ செய்திருக்கிறார். அது பாராட்டக்கூடிய விஷயத்தில் ஒன்றாகும். பிறமொழி சினிமா துறையில் வேறு புது இயக்குனர்கள் வேறு மொழியில் இருந்து வந்தால் அதை அவர்கள் வரவேற்கிறார்கள் ஆனால் , அதை நாம் செய்வதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இப்பொழுது ஆட்லி ஹிந்தியில் மட்டும் திரைப்படம் இயக்க சென்று விட்டால் நாம் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்கள் இயக்க அவரைப் போன்ற ஒரு இயக்குனர் இல்லை என்று கூறியிருந்தார். அதேபோல் அட்லி தளபதி விஜய் உடன் சேர்ந்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் மேஜிக்காக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Most Popular