Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாமூன்றாவது முறையாக நேருக்கு நேராக மோதும் கார்த்தி - சிவகார்த்திகேயன்.. ! இம்முறையாவது சிவா ஜெய்ப்பாரா.....

மூன்றாவது முறையாக நேருக்கு நேராக மோதும் கார்த்தி – சிவகார்த்திகேயன்.. ! இம்முறையாவது சிவா ஜெய்ப்பாரா.. ?

தமிழ் சினிமாவில் பல பிரபலமான இயக்குனர்களின் சிறந்த திரைப்படங்கள் நடிகர் கார்த்தியை வைத்து எடுத்து தான் ! உதாரணத்திற்கு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவர், வினோத்தின் தீரன் அதிகாரம் எண் ஒன்று என இன்னும் சில. கார்த்தியை ஓர் லக்கி சார்ம் என்றே சொல்லலாம். அண்மையில் அவரின் ரசிகர் பட்டாளமும் கூடியுள்ளது.

- Advertisement -

சிறந்த படங்களைத் தருவது போல மோதலிலும் ஆதிக்கத்தை காட்டியுள்ளார். விஜய்யின் பெரும் எதிர்பார்ப்பாக பிகில் திரைப்படத்தை எதிர்த்த கார்த்தியின் கைதி 2019 தீபாவியில் பெரும் வெற்றியைப் பெற்றது. பிறகு பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார். (இங்கு குறிப்பிட்டுள்ள வெற்றி விமர்சன ரீதியாக).

சென்ற தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் வென்றது. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இவ்வாண்டு மோதவுள்ளனர். 2019 கிறிஸ்துமஸில் தம்பி – ஹீரோ, கடந்த தீபாவளிக்கு சர்தார் – பிரான்ஸ், அடுத்து ஜப்பான் – மாவீரன்.

- Advertisement -

ஆக இது மூன்றாவது முறை. இம்முறையாவது சிவகார்த்திகேயன் ஜெயிப்பாரா ? கோலிவுட்டில் கார்த்தியைப் விட சிவகார்த்திகேயனுக்கு தான் ரசிகர் பலம் அதிகம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போதே குளைந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸை கைக்குள் போட்டுக் கொண்டார்.

- Advertisement -

இருந்தும் நடப்பு பார்வையாளர்கள் அவரிடம் வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமான கதைகளில் காண விரும்புகின்றனர். அவரும் அப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். மண்டேலா படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்ற இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மறுபக்கம் கார்த்தி, அணு இமானுவேல் நடித்திருக்கும் ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். கடந்த இரு முறை கார்த்தியுடன் மோதி மண்ணைக் கவ்விய சிவகார்த்திகேயன் இம்முறை வெற்றி பெறுவாரா அல்லது கார்த்தி ஹாட்டிரிக் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவர்களின் திரைப்படங்கள் ஜப்பான் மற்றும் மாவீரன் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.

Most Popular