Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி..! பட்டையை கிளப்பும் மாவீரன்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி..! பட்டையை கிளப்பும் மாவீரன்

- Advertisement -

தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறைகளில் டாப் 2 இடத்தை பிடித்துள்ள நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி.சிவகார்த்திகேயன் குழந்தைகளை கவரும் வகையில் படங்களை நடித்து தற்போது ஆக்சனிலும் குதித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் கொண்டாடும் நிலையில் தமக்கு காமெடி மட்டுமல்ல எமோஷன் காட்சிகளும் நன்றாக வரும் என்று டான் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் நிரூபித்தார்.

டான் திரைப்படம் தமிழகத்தில் 88 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. மறுபக்கம் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். படத்தில் ஹீரோவாகவும் , அதே சமயம் பெரிய ஹீரோகளுக்கு வில்லனாகவும் நடித்து தனக்கென ஒரு இடத்தை விஜய் சேதுபதியும் பிடித்துக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடங்கி கமல் , விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என விஜய் சேதுபதி தனது தேடலை விரிவு படுத்திக் கொண்டார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தலைமுறை நடிகரிலும் இரு துருவங்கள் இருப்பார்கள். சிவாஜி -எம்ஜிஆர் , ரஜினி- கமல் ,விஜய் -அஜித், விக்ரம்- சூர்யா, சிம்பு -தனுஷ், சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதி என இரு டாப் நடிகர்களுக்குள் போட்டி இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் டாப் நடிகர்களான சிவாஜி -எம்ஜிஆர், ரஜினி கமல், விஜய் அஜித், விஜய் சூர்யா,சூர்யா விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது அந்த பழக்கம் தமிழ் சினிமாவில் வழக்கொழிந்து விட்டது. இந்த நிலையில் தான் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ கதை போல் இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்குகிறார். இவர் நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து மண்டேலா என்ற திரைப்படத்தை எடுத்தார். . இந்தப் படத்தின் இசை அமைப்பாளராக பரத் ஷங்கர் பணியாற்றுகிறார். மாஸ்டர் விக்ரம் திரைப்படத்தை எடிட்டிங் செய்த பிலோமின் ராஜ் மாவீரன் படத்திலும் பணியாற்றுகிறார்

Most Popular