சினிமாவில் ஹீரோக்களாக இருப்பவர்கள் எல்லாம் நிஜ வாழ்வில் ஹீரோவாக வாழ்வது இல்லை.ஆனால் சினிமாவை விட நிஜ வாழ்வில் தான் உண்மையான ஹீரோ என்று நிரூபித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஆரம்ப காலத்தில் விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து பின் மூன்று திரைப்படத்தின் நடிகர் தனுஷிற்கு நண்பனாக தனது சினிமா வாழ்வை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்குப் பிறகு மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகன் ஆனார்.
ஆனால் அந்த திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது தொகுப்பாளராக அவருக்கு இறந்த பிரபலம் கதாநாயகனாக இந்த திரைப்படத்தில் கிடைக்கவில்லை.
ஆனால் அந்த நிலையிலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. அது அவரை கைவிடாமல் அடுத்தடுத்து திரைப்படங்களை நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவே மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன் .
ஆரம்பத்தில் சாதாரண ஆளாக இருந்த சிவகார்த்திகேயனை சினிமா ஒரு பெரிய நட்சத்திரமாக மாற்றியது .ஆனால் மாறியது அவருடைய வாழ்க்கை தரம் தானே தவிர குணமல்ல. அதற்கு சான்றாக பிரபல நடிகர் முனிஷ் காந்த் ஒரு youtube பெட்டியில் ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார் முனிஷ்காந்த் .
இவர் தனுஷ், ரஜினி, விஷால் ,ஜெயம் ரவி ,சிவகார்த்திகேயன் போன்ற ரசிகர்களுடன் எல்லாம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முனிஷ்காந்த் நடிக்கும் பொழுது அந்தப் படப்பிடிப்பின் கேமரா மேன் இருக்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த சமயத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை அழைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.பின் அவருடைய மருத்துவச் செலவு முழுவதையும் தன் சொந்த செலவாக ஏற்றுக் கொண்டு ஏறத்தாழ 50 லட்சம் வரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலவு செய்திருக்கிறார். அந்த எண்ணம் இதுவரை அவரிடம் மாறாமல் இருப்பதே ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயம் தான்.
திரைப்படங்களில் விளையாட்டு பிள்ளை போன்று எதைப் பற்றியும் சற்றும் கவலை இன்றி கலகலப்பான நடிப்பை ரசிகர்கள் மனதை வென்று வரும் சிவகார்த்திகேயன் நிஜ வாழ்வில் எப்படிப்பட்ட இரக குணமுடையவர் என்பதற்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் இவருடைய இந்த குணமே இவரை இன்னும் உயர்த்தும்.