தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்,ரஜினி ஆகியோர்களின் பாணியை சிவகார்த்திகேயன் கடைப்பிடித்து வருகிறார்.
ஒரே விதம் கதை ஒரே விதமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் அனைத்து படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாக்டர் படத்தில் மட்டும் வித்தியாசமான ரோலில் சிவகார்த்திகேயன் மேற்கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஒரே பாணியில் நடிக்கிறேன் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதற்காக தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு படம் வித்தியாசமாகவும் இன்னொரு படம் ரசிகர்களுக்காகவும் மேற்கொள்ள இருக்கிறார்.
இதனால் தான் நடிக்கும் படங்களிலே வித்தியாசமான கதைக்களத்தையே சிவகார்த்திகேயன் தேர்வு செய்கிறார். அதற்கு நல்ல உதாரணம் தான் அயலானும், மாவீரனும். தற்போது சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து இருக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் தற்போது புதிய அப்டேட்டாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பணியாற்றுகிறார். ராஜ்குமார் பெரியசாமி ஏற்கனவே ரங்கூன் படத்தில் கௌதம் கார்த்திகை வித்தியாசமாக காட்டியிருப்பார்.
அந்த படம் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு இது வித்தியாசமான திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர் என்பதற்காக தனது உடலை வலுப்படுத்த சிவகார்த்திகேயன் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக 20 நாள் சிறப்பு பயிற்சி எடுத்து வரும் சிவகார்த்திகேயன் வாரணம் ஆயிரம் சூர்யா போல் சிக்ஸ் பேக் வைக்கவும் தயாராக உள்ளார். இதன் மூலம் தமக்கும் வித்தியாசமான நடிக்க தெரியும் என்பதை சிவகார்த்திகேயன் காட்ட உள்ளார்.