Sunday, May 19, 2024
- Advertisement -
HomeUncategorizedசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிர்னல் தாக்கூர்! இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிர்னல் தாக்கூர்! இயக்குனர் யார் தெரியுமா?

தெலுங்கில் சீதாராமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னக சினிமாவிற்கு அறிமுகமான மிர்னல் தாக்கூர் தெலுங்கு தமிழக ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கி விட்டார்.

- Advertisement -

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த மிரனல் தாக்கூர் இவ்வளவு நாளாக இந்த பெண் எங்கே இருந்தார் என்பது போல் ரசிகர்களை யோசிக்க வைத்து விட்டார். ஆனால் இவர் ஏற்கனவே ஹிந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் .

டிவி தொடரில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரை வரை வந்துள்ள மிர்னல் தாக்கூர் எப்போது தமிழ் சினிமாவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் மிர்னல் தாக்கூர் நடிப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் அது கடைசி கட்ட நேரத்தில் கைவிடப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. மிர்னல் தாக்கூரின் தமிழ் சினிமாவின் வருகை விரைவில் அரங்கேற உள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்னல் தாக்கூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.இதனால் மிர்னல் தாக்குரின் அறிமுகம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மிர்னல் தாக்கூரின் டெஸ்ட் சூட்டிங் நடைபெறுகிறது. பொதுவாக நடிகைகளுக்கு பெரிய அளவில் ஆடிஷன் எல்லாம் நடக்காது.ஆனால் மிர்னல் தாக்கூர் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற அளவில் இருப்பாரா என்பதை சோதிப்பதற்காக முருகதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

முருகதாஸ் தர்பார் திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். நடிகர் விஜயுடன் நான்காவது முறையாக இணையும் படமும் கைவிடப்பட்டது. இதனால் அடுத்த விஜய் என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயனுடன் முருகதாஸ் இணைந்துள்ளார்.

Most Popular