Monday, April 14, 2025
- Advertisement -
Homeசினிமாதொழில் அதிபராக மாறும் சிவகார்த்திகேயன்.. சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ரெடி

தொழில் அதிபராக மாறும் சிவகார்த்திகேயன்.. சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ரெடி

தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறைந்த காலத்திலேயே உச்சபட்ச நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களையும் மார்க்கெட்டையும் வளர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சொந்தமாக பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதில் சில படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுக்காக சிவகார்த்திகேயன் நிறைய பணம் செலவழித்து கடனிலும் இருந்தார். தற்போது அந்த கடனை அடைப்பதற்காக பெரிய நிறுவனங்களிடம் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து சிவகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிவகார்த்திகேயன் வித்திட்டு இருக்கிறார். அதன்படி சென்னையில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை சிவகார்த்திகேயன் கட்ட உள்ளார். ஹைதராபாத் மையமாக வைத்து ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் அங்கே வருகிறது.

- Advertisement -

அவர்கள் அங்குள்ள பிரபல நடிகர்களுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த திரையரங்குகளை கட்டி வருகிறார்கள். குறிப்பாக ஏசியன் மகேஷ்பாபு சினிமாஸ்,ஏசியன்ஸ் அல்லு அர்ஜுன் சினிமாஸ் என்று பல திரையரங்குகளை கட்டியிருக்கிறார்கள்.

இதில் ஒவ்வொரு திரையரங்கும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த நிலையில் அந்த நிறுவனம் தற்போது தமிழகத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க உள்ளது. இதன்படி சென்னையில் ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் ஏ எஸ் கே என்ற பெயரில் உலகத்தரம் வாய்ந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கை கட்ட இருக்கிறார்கள்.

இதற்காக ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்து ஆகிவிட்டதாம். இதன் மூலம் சிவகார்த்திகேயன் தொழிலதிபராக தற்போது களம் காண்கிறார். பி வி ஆர் நிறுவனம் தற்போது அனைத்து திரையரங்குகளையும் வாங்கி ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஏசியன் சினிமாஸ் அவர்களுக்கு போட்டி போடும் விதமாக இணைந்து இருக்கிறார்கள்.

Most Popular