Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா2வது மொழி கற்கும் சிவகார்த்திகேயன்.. இது வேற லேவல் முயற்சி

2வது மொழி கற்கும் சிவகார்த்திகேயன்.. இது வேற லேவல் முயற்சி

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் சிவகார்த்திகேயன்.
இவருக்கு சிறியவர்கள் பெரியவர்கள் என்று பல ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அண்மையில் வெளியான டாக்டர், டான் என்ற இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இந்த இரண்டு திரைப்படங்களுமே 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது .நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டான் மற்றும் டாக்டர் என்ற இந்த இரண்டு படங்களுமே குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த கமர்சியல் பிலிம் ஆக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ், மாவீரன் என்று பட வாய்ப்புகள் கிடைத்து அதிலும் அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் என்ற திரைப்படத்தை ஜதிரத்னலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார. சிவகார்த்திகேயன் நடிப்பில் வர இருக்கும் பிரின்ஸ மற்றும் மாவீரன் திரைப்படம் புது கூட்டணியாக. அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஈஸ்வரன்,மம்பட்டியான் ஒஸ்தி போன்ற படங்களுக்கு இசையமைத்த தமன் தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரின்ஸ் திரைப்படத்தி கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா
நடித்திருக்கிறார். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக சத்யராஜ் மற்றும் பிரேம்குமார் அமரன் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

பிரின்ஸ் திரைப்படத்திற்கான சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
வருகின்ற தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பிரின்ஸ் திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் டப் செய்வது போன்று தெலுங்கிலும் சிவகார்த்திகேயனை டப் செய்வதாக இருக்கிறார்.அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் தனது அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular