தமிழகத் திரைப்பட உலகில் அடுத்த பெரிய நட்சத்திரமாக விளங்கும் அனைத்து தகுதியும் உடைய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். திரையுலகத்திற்கு வந்த 10 ஆண்டுகளில் அவருடைய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அஜித் விஜய் படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் அதிக வசூல் தமிழகத்தில் கிடைக்கிறது. இந்த நிலையில் தெலுங்கிலும் தற்போது சிவகார்த்திகேயன் படங்களை நடித்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக இருக்கும் மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் இதில் சிவகார்த்திகேயன் அப்படியே ரஜினிகாந்த் தளபதி படத்தில் இருப்பது போல் காட்சியளிக்கிறார்.
மேலும் வித்தியாசமான கதைகளை இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படம் அதே நாளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் தேதி முன்கூட்டியே மாற்றும் முடிவை எடுத்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கு பதில் ஜூலை மாதத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்கள். இதனால் ஜெய்லர் படம் தனியாக தான் ரிலீஸ் ஆகும். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் அது இரு படத்திற்கு மேல் வசூலை பாதிக்கும்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவருடைய படத்துடன் மோத விரும்பவில்லை. இதனால் மாவீரன் திரைப்படம் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் ஜூலை மாதமே ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.