Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயை அப்படியே காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.. SK 21 சூட்டிங் எங்கு தெரியுமா?

விஜயை அப்படியே காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.. SK 21 சூட்டிங் எங்கு தெரியுமா?

- Advertisement -

பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் என்ற திரைப்படங்களில் நடித்தார்.இதில் அயலான் திரைப்படம் 2020ல் இருந்து படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இடையில் சில காரணங்களாக படப்பிடிப்பு நிறுத்தி விட்டார்கள். மீண்டும் அதனுடைய படப்பிடிப்பு தொடங்கி தற்பொழுது திரைப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இதே போல் மாவீரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடைய 21வது திரைப்படத்தைப் பற்றிய தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.

- Advertisement -

எஸ்கே 21 என்று சொல்லப்படும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். இவர் இதுக்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நடித்த கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது ஒரு அதிரடியான திரைப்படம் ஆகும். சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் இல்லை எஸ்கே 21 திரைப்படம் இயக்குனர்  ராஜ்குமார் பெரியசாமிக்கும் இரண்டாவது திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இவர் துப்பாக்கிப் போன்ற திரைப்படங்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற எல்லா மொழிகளிலும் தனக்கென்று ரசிகர்களை குவித்து வைத்திருக்கும் நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மதுரையில் உலக நாயகன் கமலஹாசனை பற்றி தவறாக பேசி விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் அவரை கைநீட்டி அடித்தார்கள். இன்று அதே உலகநாயகன் கமலஹாசன் உடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் இந்த எஸ் கே 21 என்ற திரைப்படம் இயக்கப்பட இருக்கிறது. இது நடிகர் சிவகார்த்திகேயனுடைய வளர்ச்சியை காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்து திரைப்படத்திற்காக முன் ஏற்பாடுகள் செய்து பட்டு வருகிறது. தற்பொழுது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த பட குழுவினர்கள் காஷ்மீர் சென்று இருக்கிறார்கள். ஏற்கனவே தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படம் எடுப்பதற்காக காஷ்மீருக்கு சென்று இருக்கிறார்கள்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் திரைப்படத்தின் உடைய பெயர் எப்பொழுது வெளியாகும் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் எல்லாம் அடுத்தடுத்து வரிசையாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Most Popular