Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஇது துணிவு, வாரிசு பொங்கல் இல்ல.. மாவீரன் பொங்கல் ! கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்

இது துணிவு, வாரிசு பொங்கல் இல்ல.. மாவீரன் பொங்கல் ! கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளர்ந்து ஆலமரம் போல் நிற்கிறார் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது டாப் 5 நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய பிரின்ஸ்  திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் மாவீரன் என்ற புதிய வித்தியாசமான கதை களத்தை கொண்ட திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதை களத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அனைவரிடமும் எதிர்பார்ப்பு எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவிற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்களே அதற்கு ஏற்றார் போல் இன்று தைப்பொங்கல் திருநாளை மாவீரன் படக் குழு சிறப்பாக கொண்டாடினர்.

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சில ரசிகர்கள் இது துணிவு பொங்கலோ வாரிசு பொங்கலோ கிடையாது.. இது சிவகார்த்திகேயனின் மாவீரன் பொங்கல் என்று பதிவிட்டு வருகிறார்கள்.இதனை பார்த்ததும் அஜித் விஜய் ரசிகர்கள் ஒன்றிணையாமல் வேற என்ன செய்வார்கள்?

Most Popular