சினிமா

சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம்.. !

Sivakarthikeyan as military officer

தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ‘ மாவீரன் ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் எறத் தாழ நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. அடுத்து டப்பிங், எடிட்டிங் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மற்றும் புரொமோஷன் பணிகள் பாக்கியுள்ளது. படம் ஜூன் 29ஆம் தேதி கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதவுள்ளதாக கூறுகின்றனர்.

இதையடுத்து கமல் ஹாசன் தயாரிப்புக்கு கீழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓராண்டுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் துவங்கவுள்ளார். இந்த மாத இறுதியில் முன் தயாரிப்பு நடைபெற அடுத்த மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.

Advertisement

துப்பாக்கி படத்தின் துணை இயக்குனராக களமிறங்கி ரங்கூன் படத்தை பிரமாதமாக அளித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தன் அபார திறனால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். ஆர்.கே.எப்.ஐ நிறுவனத்தின் 51வது படமாக இது அமைகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ரங்கூன் படத்தைப் பார்த்த பின்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இந்த இயக்குனரை மிகவும் பாராட்டியதை அடுத்தும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

Advertisement

ஏப்ரல் மாதம் துவங்கும் படப்பிடிப்பு பல முக்கிய நகரங்களில் மற்றும் வட மாநிலங்களில் முக்கியமாக நடைபெறவுள்ளது. இராணுவம் சம்மந்தப்பட்ட இக்கதையில் ஹீரோ சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரியாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top