Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபந்து வீச்சாளர் நட்ராஜனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது ! சிவகார்த்திகேயன் நடிக்க ஓப்பந்தமா ?

பந்து வீச்சாளர் நட்ராஜனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது ! சிவகார்த்திகேயன் நடிக்க ஓப்பந்தமா ?

கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு அடுத்து 100 கோடி வசூல் வேட்டையை தொடர்ந்து அளிப்பவர் சிவகார்த்திகேயன். அவரின் கடைசி இரண்டு படங்களான டாக்டர் மற்றும் டான் அபார வெற்றிப் படமாக அமைந்தது. மிகவும் ஜாலியான படமாக அளிப்பதால் இவரின் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் ஆதரவு எப்போதும் நிலைத்து இருக்கிறது.

- Advertisement -

அடுத்ததாக வரவிருக்கும் பிரின்ஸ் படமும் கலகலப்பான காமெடி படமாக உருவாகியிருக்கிறது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிய இப்படம் வருகிற தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதுப் போக தேசிய விருது வென்ற இயக்குனர் அஷ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

தங்கராசு நட்ராஜன் வாழ்கை வரலாற்றில் எஸ்.கே

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் பிறந்து சிட்னி வரை சென்று சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர் தங்கராசு நட்ராஜன். தமிழ்நாடு பிரீமியர் லீகில் அபாரமாக பந்துவீச உடனே ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைத்தது. தனது மூன்றாவது சீசனில் ஹைதராபாத் அணிக்காக தன் முழு திறனை வெளிக்காட்டி இந்திய அணிக்கு தகுதி பெற்றார்.

- Advertisement -

துல்லியமான யார்க்கர் பந்து போடும் பலத்தை வைத்து ஆஸ்திரேலியாவில் மூன்று வடிவக் கிரிக்கெட்டிலும் கால் பதித்தார். அதன் பின்னர் காயம் காரணமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு பறிபோனது. மீண்டும் அணிக்குள் நுழைய அயராது உழைத்து வருகிறார்.

- Advertisement -

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளார் நட்ராஜன். இந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரின் வாழ்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது பேச்சு வார்த்தைகள் மட்டுமே போய்கொண்டு இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

Most Popular