சினிமா

கலக்கல் காம்போ இது.. ! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. ! எப்போ தெரியுமா.. ?

Sivakarthikeyan Venkat Prabhu

கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். லாக்டவுனுக்கு இடையில் டாக்டர், பின்னர் கடந்த ஆண்டு டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய அவரது இரண்டு படங்கள் வெளியானது. உடனே தன் அடுத்த படத்தையும் தொடர்ந்தார். தேசிய விருது இயக்குனர் அஷ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இது நிறைவடைந்த பின்னர் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தில் இராணுவ வீரனாக வரவுள்ளார்.

இத்தனை படங்களுக்கு இடையே அயலான் எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும் அவ்வப்போது நடிக்கிறார். அந்தப் படத்தின் ரீலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக குறிப்பிடப்படவில்லை. தற்போது மாவீரனின் இறுதிக்கட்டப் பணியில் இருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் 10 நாளில் இந்தப் படத்தை முடித்துவிட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் பிரி புரொடக்ஷனை துவங்கவுள்ளார்.

Advertisement

அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த 4 – 5 மாதங்கள் நடக்கும் எனத் தெரிகிறது. அண்மையில் கிடைத்துள்ள தரமான செய்தி என்னவென்றால், செப்டம்பர் மாதம் கோலிவுட்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் கைகோர்க்க உள்ளாராம். பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஓர் காம்போ விரைவில் சேரவுள்ளது.

காமெடியில் கலக்கி இன்று தமிழ் சினிமாவின் உயர்த்திப் ஓர் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் துவங்கி பல்வேறு நகைச்சுவை படங்கள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மறுபக்கம் வெங்கட் பிரபு திரில்லர், ஆக்க்ஷன் என எந்த வகையில் படம் செய்தாலும் அதில் காமெடி இல்லாமல் செய்யவே மாட்டார். அவரது படங்களில் காமெடிகளும் தரமாக இருக்கும். இப்படிப்பட்ட காம்போ கைகோர்த்தால் பொழுதுபோக்குக்கு பஞ்சமே இருக்காது.

Advertisement

வெங்கட் பிரபுவின் ‘ கஸ்டடி ’ திரைப்படம் வருகின்ற மே 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதன் பிறகு அவர் சிவகார்த்திகேயனுடன் செய்யவிருக்கும் இந்தப் படத்தின் பணிகளை தொடர்வார் என கூறப்படுகிறது. அதோடு கரகாட்டக்காரன் 2 படத்தை இயக்கவும் உள்ளார். சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு ஜோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் தகுந்த வட்டாரங்களில் இது கன்பார்ம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top