லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் டோலிவுட் சூப்பர்ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்கவுள்ளார். மாநகரம் எனும் சிறிய பட்ஜெட் படத்தில் துவங்கி தன் மேக்கிங் திறனால் மல்டி ஸ்டாரர் படங்களில் அதிரடி காட்டி தங்கென்று ஓர் அங்கீரதைப் பெற்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இடையே ரஜினி அவர்கள் தன் மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 ஆகிய இரு படங்களில் நடிக்கிறார்.
லியோ படம் சம்மந்தமான நேர்காணல் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் தலைவர் 171 குறித்து சில தகவல்களை அளித்தார். அதாவது இந்தப் படம் 2016ஆம் ஆண்டு எழுதிய கதை எனவும் அதில் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு ஏற்றவாறு சில திரைக்கதை மாற்றங்கள் செய்து ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் துவங்க வாய்ப்புள்ளது என்றார்.
முன்னரே ரீலீஸ் தேதி வழங்காமல் மிகவும் நிதானமாக எந்த வித சமரசமும் செய்துக் கொள்ளாமல் 100% லோகேஷ் படமாக அமைய கால அவகாசம் கேட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. திரைக்தை பணியில் தீவிரமாக உள்ளார். போஸ்டர் வெளியீட்டிலேயே இரத்தம் தெரித்து, ஆகையால் இதுவும் ஆக்க்ஷன் படமாக அதிர வைக்கவுள்ளது.
கோலிவுட்டில் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்கள் ஒன்றாக நடித்து வசூல் வேட்டை புரிகின்றனர். படம் சுமாராக இருந்தாலும் இரு பெரிய நடிகர்கள் திரையில் ஒன்றாக வரும் போது விசில்கள் பறக்கின்றன. மல்டி ஸ்டாரர் படங்களில் அனைத்து ஹீரோக்களுக்கும் தகுந்த இடம் அளிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லோகேஷ் அதை விக்ரம் படத்தில் சரியாக செய்தார்.
தலைவர் 171 படத்திலும் அவர் அந்த மந்திரத்தை சரியாக பயன்படுத்த உள்ளார். ஜூனியர் சூப்பர்ஸ்டார் போல் திரையுலகில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்யில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்தில் நடிப்பது சிவகார்த்திகேயனுக்கும் ஃபேன்பாய் தருணமாக அமைகிறது.