Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னங்க சொல்றீங்க.. சிவகார்த்திகேயன் காமெடி பண்ண மாட்டாரா?

என்னங்க சொல்றீங்க.. சிவகார்த்திகேயன் காமெடி பண்ண மாட்டாரா?

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது இதை தொடர்ந்து வருகின்ற ஜூலை மாதம் இரண்டாம் தேதி திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது

- Advertisement -

இத்திரைப்படத்தை இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படத்தின் இசையமைப்பாளரான பரத் சங்கர் இசையமைத்து வருகிறார் மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலுமே ஒரே நாளில் வெளியிடப்பட இருக்கிறது தமிழில் மாவீரன் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் மாவீரடு என்ற பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் நடிகர் சிவகார்த்திகேயனின் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் ரெட் செயின் நிறுவனம் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது

- Advertisement -

மேலும் இயக்குனர் மடோன் அஸ்வினிடம் இத்திரைப்படத்தை பற்றி ஒரு கேட்ட பொழுது அவர் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நான் இதை திரைப்படத்தை இயக்கும் பொழுது நடிகர் சிவகார்த்திகேயனிடம் எந்தவிதமான இடையூறும் எனக்கு ஏற்படவில்லை நான் கொடுத்த கதாபாத்திரத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அவர் எனக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார் அந்த அளவிற்கு அவருக்கு பொருத்தமாக அமைந்தது இந்த கதாபாத்திரம் மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு நகைச்சுவை என்று எந்த பங்கும் இல்லை அவரை சுற்றி இருப்பவர்கள் தான் நகைச்சுவை செய்வார்கள் இவருக்கு சீரியஸான கதாபாத்திரம்தான் என்றும் கூறியிருக்கிறார்

- Advertisement -

பொதுவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற எல்லா திரைப்படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவருடன் சேர்ந்து சூரி என்று இருவருமே நகைச்சுவையாகவே நடித்திருப்பார்கள் ஆனால் அண்மையில் இவர் நடித்த இயக்குனர் நர்சலின் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகனாக இல்லாமல் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன் அந்த கதாபாத்திரமும் அவருக்கு பொருத்தமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு வரவேற்பை பெற்றது

பிரின்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்தது தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி தான் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் இதனால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது

Most Popular