தமிழ் சினிமாவில் முதலில் வில்லனாக நடித்து பிறகு ஹீரோவாக கலக்கிய பல பேரை நாம் பார்த்திருப்போம்.. ஆனால் முதலில் டைரக்டராக பெரிய அளவில் புகழை பெற்று பின் நடிகராக மாறி அதன் பின்னர் வில்லனாக கலக்கி வரும் ஒரே நபர் என்றால் அது எஸ்.ஜே. சூர்யா தான் . மாநாடு, டான் போன்ற படங்களில் எஸ். ஜே. சூர்யா நடித்த கதாபாத்திரம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எஸ். ஜே சூர்யாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது எஸ் .ஜே சூர்யாவிடம் அவரது பழைய வாழ்க்கை குறித்து சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது .
அப்போது கொஞ்சம் எமோஷனலான எஸ். ஜே . சூர்யா தாம் கிழிந்த செருப்பு அணிந்துதான் நடிகர் அஜித்தை சந்தித்து கதை சொன்னதாக கூறினார். ஆனால் அஜித் என் தோற்றத்தை பார்க்காமல் என் திறமையை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்ததாக கூறினார். நடிகர் அஜித் அவருடைய திரைப்பட நண்பர்களிடம் இவர்தான் என்னுடைய அடுத்த இயக்குனர் என்று கூறும் போது, என்னுடைய தோற்றத்தை பார்த்து மற்றவர்களெல்லாம் அஜித்துக்கு என்ன ஆச்சு இவருக்கு போய் டைரக்டரா தேர்வு பண்ணி இருக்காரு என்று மனதில் நினைத்தனர். அதைப் பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . இதை புரிந்து கொண்ட அஜித் இங்கே வா டார்லிங் என்று தோள்மேல் கையை போட்டு என்னை இழுத்து சகஜமாக பேசி என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார் .
அதன் பிறகு நான் நடந்து தான் சென்று கொண்டிருப்பேன், அதை பார்த்த அஜித் என்னுடைய டைரக்டர் நடக்கக்கூடாது என்று எனக்காக ஒரு பைக் வாங்கி பரிசாக அளித்தார். அந்த பைக் இன்னும் இருக்கிறது என்று கூறிய எஸ் ஜே சூர்யா வாலி படம் வெளியாவதற்கு முன்பு , ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்துவிட்டு நடிகர் அஜித் என்னை அவசரமாக அழைத்தார். அப்போது என்னிடம் உனக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு நான் உங்களுக்கு என்ன கலர் பிடிக்குமோ அது தான் சார் எனக்கும் பிடிக்கும் என்று கூறினேன். அதற்கு அஜித் எனக்கு ஒயிட் பிடிக்கும் என்று கூறியதற்கு எனக்கும் அப்போது ஒயிட் தான் சார் பிடிக்கும் என்று தெரிவித்தேன். இதனை அடுத்து மறுநாளே எனக்கு வெள்ளை நிறத்தில் சான்ட்ரோ காரை பரிசாக நடிகர் அஜித் அளித்தார். அப்போது எனக்கு கார் ஓட்டத் தெரியாது, நடிகர் அஜித் கொடுத்த காரை ஓட்ட தெரியாமல் நேராக சுவற்றில் மோதி விட்டேன் என்று எஸ் ஜே சூர்யா கலகலவென கூறினார். நடிகர் அஜித்தை தம் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.