Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் ! அவார்ட்களை அள்ளிய கோலிவுட்

சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் ! அவார்ட்களை அள்ளிய கோலிவுட்

நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கோங்ரா இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓ டி டி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆனது. திரையரங்குகளில் ரிலீசாகி இருந்தால் 200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆனது.

- Advertisement -

கேப்டன் ஜி ஆர் கோபிநாத் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, ராணுவத்தில் இணைந்து ஏழை மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் விமான நிறுவனத்தை தொடங்க தான் சந்தித்த இன்னல்களை எப்படி கடந்தார் என்பது குறித்து படம் எடுக்கப்பட்டது .இதில் சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு இந்தியாவில் பிரபலம் அடைந்தது.

ஹீரோயின் ஆக நடித்த அபர்ணா பால முரளியும் சூர்யாவுக்கு கடும் போட்டியை தந்தார். ஜீ. வி குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த நிலையில் 68வது திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை,சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த திரைக்கதை ,சிறந்த திரைப்படம் ஆகிய ஐந்து பிரிவுகளில் தேசிய விருதை அள்ளி சென்றுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் தற்போது இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரைப்படம் ஒன்று ஐந்து விருதுகளை வென்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு திரைத்துறை சார்ந்த பல்வேறு கலைஞர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதேபோன்று சிறந்த அறிமுக திரைப்பட இயக்குனருக்கான விருதை மண்டேலா திரைப்படத்தை ஏற்க மடோன அஸ்வின் பெற்றுள்ளார். மலையாளத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன அய்யப்பன் கோஷியும் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த சண்டைக்காட்சி இயக்குனர், சிறந்த துணை நடிகர் ஆகிய 3 விருதுகள் கிடைத்துள்ளன

Most Popular