சினிமா

ஹிந்தி மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்.. தளபதி 67 இல் நட்சத்திர பட்டாளத்தை இறக்கிய லோகேஷ்

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விட அவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே பல மடங்கு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தொலைக்காட்சி மட்டும் ஓடிடி உரிமைகள் பெருந்தொகைக்கு கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வாரிசு பொங்கல் அன்று வெளியாக இருப்பதால் அந்தப் படத்தின் எதிர்பார்ப்பை தளபதி 67 பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அதன் அப்டேட்ஸ்களை நிறுத்தி வைக்க நடிகர் விஜய் முடிவு எடுத்து இருந்தார். எனினும் அந்த படத்தில் யார் நடிக்கிறார் என்ற இறுதி தகவல் தற்போது நமக்கு கிடைத்திருக்கிறது. இது 99 சதவீதம் உறுதி என்பதால் ரசிகர்கள் தாராளமாக நம்பலாம்.

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை செய்யப்பட்டு தளபதி 67 பற்றிய உறுதியை பட குழுவினர்கள் ரசிகர்களுக்கு வெளியிட்டார்கள். இந்த மகிழ்ச்சியில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு மேலும் மேலும் தளபதி 67 பற்றிய அப்டேட்ஸ்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Advertisement

இதற்கு முன்பு நடிகை திரிஷா பல அண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு நடிக்க ஒப்பந்தம் செய்ய இருப்பதான தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரேமம் புகழ்  நவீன் பாலி, கே ஜி எஃப் வில்லன் சஞ்சய் தட் ,ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் ஆகிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதான தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் திரைப்படம் கேரளாவில் அதிக வசூல் பெரும் என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். தற்போது தெலுங்கிலும் அவருடைய மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. தெலுங்கு மார்க்கெட்டை அதிகப்படுத்துவதற்காக தான் வாரிசு திரைப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார். எனினும் நடிகர் விஜய்யால் ஹிந்தி மார்க்கெட்டை கைப்பற்ற இதுவரை முடியவில்லை. ஹிந்தி மார்கெட்டில் குறைந்தபட்சம் 50 கோடிக்கு மேல் படம் வசூல் செய்தால் மட்டுமே பேன் இந்தியா திரைப்படம் ஆக உருவெடுக்க முடியும். இதனால் வட இந்தியாவில் படத்தைக் கொண்டு செல்ல சஞ்சய் தட் போன்ற நட்சத்திரங்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்பதால் தளபதி 67 அவர் நடித்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கதை திரைக்கதை மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்திய ரசிகர்கள் மனது கவரும் வகையில் அமைக்கப்பட்டால் தளபதி 67 புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top