சுசாந்த் சிங் ராஜ்புட்டின் துல்லியமான நடிப்பில் 2016ஆம் ஆண்டு இந்தியாவின் பெருமை வாய்ந்த கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியது. இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கினார். இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது.
ஸ்போர்ட்ஸில் ஒரு வீரரின் வாழ்கை வரலாற்றின் வகையில் உருவாக்கப்பட்ட சிறந்த திரைப்படமாக என்றால் அது நிச்சயம் ‘ எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி ’ தான். பள்ளி சிறுவனில் துவங்கி 2011 உலகக் கோப்பையை வெல்லும் வரை நடந்த முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இப்படம். கமேர்ஷியலாக சிறப்பான வடிவத்தைக் கொண்டதே இதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.
ரீ – ரிலீஸ் செய்யப்படும் எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி
ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வருகின்ற மே 12ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பேன் இந்தியா படமான இது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முக்கிய மொழிகளில் வெளியாகிறது.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே வருகிறார். இந்த ஆண்டுடன் அவர் இதில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக தெரிகிறது. சென்னை அணி எங்கு சென்றாலும் ஸ்டேடியம் மஞ்சம் படையாயால் நிரம்பி அது சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் கிராவுண்டாக மாறிவிடுகிறது.
சமூக வலைதன்கங்கள் முழுக்க தோனியின் புகழ் தான். தன் கேரியரின் கடைசி தருணங்களை மிகவும் சந்தோஷமாக அனுபவித்து வருவதாக தோனியும் கூறினார். இந்நிலையில் தோனியின் புகழை திரையரங்கிற்கும் செலுத்த படக்குழு முடிவு செய்து ரீ – ரிலீஸ் செய்கின்றனர்.
இந்தியாவின் சிறந்த கேப்டன் மற்றும் தலைசிறந்த பினிஷரான தோனிக்கு இச்சமயத்தில் மேலும் பெருமை ஊட்டுகின்றனர். இந்த தருணத்தில் படத்தை மீண்டும் வெளியிடுவதால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும் தயாரிப்பு நிறுவனம் இதைச் செய்கின்றனர்.