Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்பு - மிஷ்கின் காம்போ உண்மையா பொய்யா.. !? யாருடன் சிம்புவின் அடுத்த படம்.. !

சிம்பு – மிஷ்கின் காம்போ உண்மையா பொய்யா.. !? யாருடன் சிம்புவின் அடுத்த படம்.. !

2023ஆம் ஆண்டு கோலிவுட்டில் பல திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது. லியோ, அஜித் 62, பொன்னியின் செல்வன் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். அதில் சிலம்பரசனின் பத்து தல படமும் இடம் பெற்றுள்ளது. முப்டி படத்தின் ரீமேக்கான இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

- Advertisement -

மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாகிறது. சூரி, விஜய் சேதுபதி சிறப்பித்திருக்கும் வெற்றிமாறனின் விடுதலை படத்துடன் மோதுகிறது. வெற்றிமாறன் படத்துடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட சிம்பு மோதுவது மாஸ் தான்.

பத்து தல படத்தின் முதல் பாடல் சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியானது. விரைவில் இசை வெளியிட்டு விழாவும் (மார்ச் 18) நடைபெறவுள்ளது. அதில் நடிகர் சிம்பு தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அந்த அறிவிப்பு மிஷ்க்கின் திரைப்படமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே காம்போ இணையவிருப்பதாகவும் அதில் சுருதி ஹாசன் ஜோடி சேருவதாகவும் கூறினர், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஜனவரி மாதம் இயக்குனர் மிஷ்கின் தன் ஸ்கிரிப்டின் திரைக்கதை வேலைகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார். அந்த கதையில் தான் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

மேலும் லியோ படத்தில் தன் பகுதியை சிறப்பாக முடித்துவிட்டு கேஷ்மிரில் இருந்து சென்னை திரும்பிவிட்டார். இனி முழு கவனத்தையும் தன் படத்தில் செளுத்தவுள்ளார். மார்ச் 20ஆம் தேதி பணிகளை துவங்கவும் இருக்கிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூட “ சிம்பு தம்பியை வைத்து ஒரு சைக்கோ படம் எடுக்க வேண்டும் ” என மிஷ்கின் தன் விருப்பத்தை தெரிவித்தார். அது ஒரு குறிப்பாக கூட இருக்கலாம்.

அதே சமயம் கலைப்புலி எஸ்.தானுவிடம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் சேசிங் பெரியசாமி, ஓர் வரலாற்று படத்தின் கதையும் கூறியுள்ளார். அப்படம் கோலிவுட்டில் ஓர் மைல்கல்லாக நின்று நிற்கும் என தயாரிப்பாளார் நம்புகிறார். இதில் சிம்பு நடிக்கவிருப்பதாக பேசுகின்றனர். யார் படம் முதலில் எண்ணத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கிடைத்த தகவல்கள் படி பார்த்தால் மிஷ்கினுக்கு தான் வாய்ப்புகள் அதிகம்.

Most Popular