Wednesday, July 9, 2025
- Advertisement -
Homeசினிமாசுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் ரீரிலிஸ் ஆகிறது.. எந்த தேதி தெரியுமா?

சுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் ரீரிலிஸ் ஆகிறது.. எந்த தேதி தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் சுப்பிரமணியபுரம் திரைப்படம் ஒன்று. பாட்டு, சண்டை என இருந்த தமிழ் சினிமாவை வேறொரு பாதைக்கு மாற்றிய திரைப்படம் என்றால் அது சுப்பிரமணியபுரம் தான்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார்.இதில் நடித்திருந்த அனைத்து நட்சத்திரங்களும் தற்போது பெரிய லெவலில் இருக்கிறார்கள்.ஜெய் உச்ச நட்சத்திரமாக இல்லை என்றாலும் சினிமாவில் வலம் வரும் அளவுக்கு இருக்கிறார்.

இந்த நிலையில் இது திரைப்படம் தமிழ்நாட்டு மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்து தான் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக்ஷ்யப் ஹிந்தியில் இது போன்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை ரீலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார்.பழைய திரைப்படங்களுக்கு தற்போது நல்ல மவுஸ் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

உதாரணத்திற்கு அண்மையில் மீண்டும் திரைக்கு வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் அதனை பலரும் வந்து திரையரங்குகளில் பார்ப்பார்கள் என்பதால் சசிகுமார் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் .இந்த செய்தியை கேட்டதும் 90 கிட்ஸ் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் விட்டவர்களும் 2k கிட்ஸ் களும் மீண்டும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். இதன் மூலம் நல்ல வசூல் சாதனை படைக்க முடியும் என்றும் இதனை தங்களுடைய அடுத்த படங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சசிகுமார் முடிவெடுத்திருக்கிறார் .

Most Popular