தமிழில் லால்டவுன் சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரம்மாண்ட வரவேற்பு படத்திற்கு. கதை, திரைக்கதை, எமோஷனல் கனெக்ட் என அனைத்திலும் சிறந்து விளங்கிய திரைப்படம் 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை (சுதா கோங்கரா), சிறந்த இசையமைப்பாளர் (ஜி.வி.பிரகாஷ்) என நால்வரும் படத்தின் முதுகெலும்பாக செயல்பட்டனர்.
படத்தின் ஒரே குறை தியேட்டரில் வெளியாகாதது தான். தேசிய விருது வென்ற பின்னர் சில திரையரங்குகளில் ஒரு வாரம் திரையிட்டனர் அவ்வளவு தான். சரியான ரீலீஸ் தேதியுடன் நேரடியாக திரையரங்கில் வந்திருந்தால் திருவிழா கணக்காக கொண்டாடப்பட்டிருக்கும். தமிழில் சிறப்பாக வந்த படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வது தற்போது சாதரான ஒன்றாகிவிட்டது. அந்த கணக்கில் சூரரைப் போற்று படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது.
அக்ஷய் குமார் வைத்து ஹிந்தியிலும் அதை சுதா கோங்கரா தான் இயக்குகிறார். படத்தின் ஆல்பமில் சில மாற்றங்களும், படத்தில் ஒரு சண்டைக் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாலிவுட்க்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் கணக்கு இதெல்லாம். படத்தின் ஷூட்டிங் ஒரு வருடத்திற்கு மேல் இன்னும் போய்க் கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பின் போது இயக்குனர் சுதாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். சரியாக இன்னும் ஒரு மாதம் ஆகும் நிலையில் ‘ ஒரு மாத இடைவேளை ’ எனக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு இப்போது தேவையான இடைவேளை இது இல்லை என்பதையும் ஹாஸ்டாகில் குறிப்பிட்டுள்ளார்.
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023
இந்தப் படத்திற்கு பின்னர் சுதா அவர்கள் சூர்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார். அப்பட அடுத்த ஆண்டு வெளியாகும். ஏற்கனவே நடிகர் சூர்யாவுக்கு சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு ஒன்று தயாராகி வருகிறது. அது தவிர்த்து இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசலும் கையில் இருக்கிறது.