தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா – இயக்குனர் அமீர் விவகாரம் தற்போது கோலிவுட்டில் பெரிய சர்ச்சையாக போய்க் கொண்டிருக்கிறது. நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீர் கோடி கணக்கில் பண மோசடி செய்தார் என ஞானவேல் ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.
ஒரு கட்டத்தில் படத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சூர்யா சொன்னதை சமுத்திரகனி குறிப்பிட்டு உண்மையிலேயே கார்த்தியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கடன் வாங்கி படத்தை வெளியிட்டது அமீரின் பண்பு. இஷ்டத்துக்கு பேச வேண்டாம், தேவைபட்டால் நாங்களும் பலவற்றை பேச வேண்டி வரும் என சமுத்திரகனி விளாசினார்.
இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் படம் ஒப்பந்தம் ஆவதற்கு முன் நடந்தவற்றை கூறினார். அவர் கூறியதாவது, “ நான், கார்த்தி மற்றும் சுதா கொங்காரா மூவரும் ஆல்பர்ட் தியேட்டரில் அமீரின் இரு படங்களைப் பார்க்க சென்றோம். ராம் படம் பார்த்தப் பின் கார்த்தி 50- 50 என்ற மனநிலையில் இருந்தார். இயக்குனர் சுதா அமீரின் மேக்கிங் சரியில்லை என தெரிவித்தார். ”
அமீரின் மெளனம் பேசியதே, ராம் படங்களை இப்படி விமர்சன செய்வதைப் பொறுக்காத ரசிகர்கள் சுதாவை இணையத்தில் ஓட்டித் தள்ளினர். சுதாவின் அறிமுக படத்தை தெலுங்கில் இருந்து தோண்டி எடுத்தெல்லாம் கலாய்த்தனர். இதனையும் தாண்டி சுதாவின் இறுதிச்சுற்று படத்திற்காக அவர் செய்த இரக்கமற்ற செய்திகளை சுதாவின் இரண்டாம் முகம் என குறிப்பிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.
இறுதிச்சுற்று திரைப்படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டது. குத்துச் சண்டை வீராங்கனை துளசி ஹெலனின் வீட்டிற்க்கு சென்று அவரின் முழு கதையையும் கேட்டுத் தான் சுதா அவர்கள் இறுதிச்சுற்று படத்தை செய்துள்ளார். என்னுடைய கதை என்பதற்காக சுதாவின் ஆபீசுக்கு சென்று கொடுக்கவேண்டிய பணத்தைக் கேட்டதற்கு இயக்குனர் சுதா அந்த வீராங்கனையிடம் எனக்கு கமிஷனர் போன்ற பெரியரோகள் பலர் தெரியும் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
Sudha Kongara 😳😏pic.twitter.com/UP1ZAmUMcZ
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 26, 2023
துளசி ஹெலன் பேசிய இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. சுதாவின் மரறுமுகம் என மக்கள் அவரைப் பொளந்து வருகின்றனர். மறுபக்கம் அமீர் அவர்களின் படத்தைப் பற்றியோ அவரைப் பற்றியோ தரக் குறைவாக பேசவில்லை எனக் கூறி ஓர் டுவீட்டையும் பதிவிட்டுள்ளார் சுதா கொங்கரா.