சினிமா

கோடை விடுமுறையில் வரிசை கட்டும் திரைப்படங்கள்.. எந்த தேதியில் ரிலீஸ்?

2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது முற்றிலும் முடங்கப்பட்டு கிடந்தது. இவற்றால் ஆரம்பிக்கப்பட்ட பல படப்பிடிப்புகள் தடைப்பட்டு நின்று விட்டது. இந்த நிலை மாறி திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு அடுக்கடுக்காக நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டே இருக்கிறது.

Advertisement

திரையரங்குகள் திரைப்படங்கள் வெளியாகாத நிலையிலும் ஓடிடிக்கலில் சில படங்கள் வெளியாகி வந்தது. அதையும் ரசிகர்கள் வரவேற்று வந்தார்கள். இது ஒரு புறம் இருக்க தற்பொழுது பல திரைப்படங்கள்  வெளியிடப்படுவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது.

வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி நடிகர் சிம்பு நடிக்கும் பத்து  தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இதைத் தொடர்ந்து அதே நாளில்  நடிகர் நானி நடிக்கும் தசரா திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. அவற்றைத் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் வெற்றிமாறனின் திரைப்படமான விடுதலை திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement

இதனை தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்ற இரண்டு திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில்  வர இருக்கிறது. மேலும் அதே நாளில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படமும் வெளியிடப்பட இருக்கிறது.

மேலும் மே மாதம் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் என்ற திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

இப்படி மார்ச், ஏப்ரல் மே போன்ற மாதங்களில் வெளியிடப்பட இருக்கும் இந்த திரைப்படங்கள் கோடை விடுமுறையை கொண்டாட வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top