சினிமா

விஜய் சேதுபதியை நம்பி 2 மடங்கு பட்ஜெட்டை போட்ட சுந்தர் சி

2014ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்தது அரண்மனை திரைப்படம். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி உடன் இணைந்து வினய், ஆண்ட்ரியா,லட்சுமி ராய், ஹன்சிகா மோட்வானி சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisement

இதேபோல் 2016 ஆம் ஆண்டு அரண்மனை 2 என்று இயக்குனர் சுந்தர் சி இயக்கினார் இந்த திரைப்படத்திற்கும் முதல் திரைப்படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத வேறு ஒரு கதைக்களத்தைக் கொண்டு அமைந்திருக்கும். இதிலும் நடிகர் சுந்தர்சியுடன் இணைந்து சித்தார்த், ஹன்சிகா மோட்வானி, திரிஷா சந்தானம், கோவை சரளா, சூரி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு அரண்மனை திரைப்படத்தினுடைய மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரமான நடிகர் ஆர்யா. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .மேலும் இதில் சுந்தர் சி ராசி கண்ணா விஜய் டிவியின் பிரபலம் மைனா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை தான் பெற்றது.
பிற இரண்டு படங்களை ஒப்பிடுகையில் இந்து திரைப்படம் சற்று கலவையான விமர்சனத்தை பெற்றது இருப்பினும் இந்த மூன்று திரைப்படங்களுமே வசூல் ரீதியாக ஒரு நல்ல வெற்றியை பெற்றது.
இவற்றினை தொடர்ந்து தற்போது 55 கோடி ரூபாய் செலவு அரண்மனை திரைப்படத்தின் உடைய நான்காவது பாகம் எடுக்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் இல்லாவிட்டால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

Advertisement

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் நடிகர் சந்தானமும் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறதுமாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாக பார்த்த விஜய் சேதுபதியை ரசிக்க பல ரசிகர்கள் கூட்டம் உருவானது .இதற்குப் பிறகை இவர் நடித்த மாமனிதன், டிஎஸ்பி போன்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவை எதுவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெறவில்லை. இவற்றிற்க்கே பிறகு தற்பொழுது இவர் நடிக்க இருக்கும் இந்த அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top