சினிமா

“ அஜித்தை நான் இயக்க மாட்டேன் ” – லைகா கொடுத்த வாய்ப்பை மறுத்த இயக்குனர் சுந்தர்.சி

Ajith Sundar C

துணிவு படத்தின் அபார வெற்றிக்குப் பின்னர் உடனே அஜித் 62வது படத்தை தொடர விரும்பினார். ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவனின் மெத்தன போக்கால் லைகா நிறுவனம் அந்தப் பிராஜக்ட்டை கைவிட்டு மாற்று இயக்குனரின் தேடலில் ஈடுபட்டுவிட்டது. விக்னேஷ் சிவனின் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் அறியாமல் இருக்கிறது.

அஜித்திடம் கே.எஸ்.ரவிகுமார், விஷ்ணு வர்தன், சுந்தர் சி, மகிழ் திருமேனி, தரணி என 5 இயக்குனர்கள் கதை சொன்னார்கள். இதில் இப்போது வரை மகிழ் திருமேனி தான் கன்பார்ம் என தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன. இசையமைப்பாளராக சந்தோஷ் நாரானனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Advertisement

அதிகாரபூர்வ அப்டேட் இந்த வார இறுதியில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே லைகா நிறுவனத்திற்கு மிக நெருக்கமான இயக்குனராக இருக்கும் சுந்தர்.சி-க்கு அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைப்பது போல் செய்திகள் வைரல் ஆகின. பின்னர் எல்லாம் வதந்திகள் என மறுக்கப்பட்டன.

உண்மையில் நடந்தது என்னவென்றால், அஜித்தை உடனேயே இப்பொழுதே இயக்குவது சாத்தியம் இல்லை என சுந்தர்.சி சொல்லி வாய்ப்பை மறுத்துவிட்டார். ஏற்கனவே அரண்மனை 4 படத்தின் வேலைகள் மற்றும் நடிகராக சில படங்கள் கையில் இருப்பதால், உடனே முடியாவது என்று கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் மகிழ் திருமேனி தான் அஜித்தை போகிறார் என்பது 95% உறுதியாகிவிட்டது.

Advertisement

நேற்று கூட மகிழ் திருமேனி லைகா நிறுவன ஆபிஸில் இருந்து டாடா படக் குழுவினரை பாராட்டி புகைப்படங்கள் வெளியிட்டார். மறுபக்கம் நடிகர் அஜித் இப்போது ப்ரேக்கில் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றியினால் அதே போல மகிழ் படத்திலும் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் இருக்க வேண்டும் என அஜித் தரப்பு கேட்டிருப்பதாகவும் அதற்க்காக இயக்குனர் ஸ்கிரிப்ட்டில் மாற்றங்கள் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top