Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதிறமை,உழைப்பை விட சினிமாவில் வெல்ல இது தான் முக்கியம்

திறமை,உழைப்பை விட சினிமாவில் வெல்ல இது தான் முக்கியம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் இயக்குனர் சுந்தர் சி . நடிகர் ஆனாலும் இவரை இயக்குனர் என்று அடையாளப்படுத்துவதன் காரணம் முதல் முதலில் இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகத்தான் அறிமுகமானார்.

- Advertisement -

மறைந்த பிரபல இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியவர் நடிகர் சுந்தர் சி. அதற்கு பிறகு 1995இல் முறைமாமன் என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார். இயக்குனர் சுந்தர் சி இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கூட யாரோ ஒருவர் போல் வருவார் சுந்தர்சி அதே திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த குஷ்புவை தான் அவர் காதலிக்கு திருமணமும் செய்து இருக்கிறார்.

அதற்குப் பிறகு அதே வருடத்தில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தையும் இயக்குனர் சுந்தர் சி தான் இயக்கி இருக்கிறார். மேலும் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் உன்னைத்தேடி, ரிஷி, நாம் இருவர் நமக்கு இருவர்,அன்பே சிவம்,வின்னர்,கிரி, கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இதில் நிறைய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன்.ஆக்சன் கிங் அர்ஜுன் கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகை நடிகர்களை வைத்து ஹிட்டான திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.இயக்குனர் சுந்தர் சி இப்படி இயக்குனராக இருந்த சுந்தர் சி யை 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சூரஜ் தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

- Advertisement -

அது திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி இயக்குனர் சுந்தர் சி ஒரு யுடியுப் பெட்டியில் பகிர்ந்திருக்கிறார்.தலைநகரம் திரைப்படத்தை நடித்துவிட்டு அந்த திரைப்படம் வெளியிடக்கூடிய நாட்களில் எல்லாம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டாராம் .

தன்னை யாரும் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விமர்சனங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்று பயத்தில் இதைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று வெளிநாட்டுக்கு சென்று விட்டாராம் இயக்குனர்.

மூன்று நாட்கள் கழித்து இயக்குனர் சூரஜ், இயக்குனர் சுந்தர் சி இடம் படம் வெற்றி அடைந்து விட்டது. உங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது என்று கூறிய பிறகுதான் ஊருக்கே வந்தாராம்.

அதன் பிறகு இருவரும் சென்று அந்த திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றார்களாம். அப்பொழுது அங்குள்ள ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து திரைப்படங்களை பார்ப்பதை இயக்குனர் சுந்தர் சி கண்டதும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாம்.

மேலும் ரசிகர்களும் இயக்குனர் சுந்தர் சி யை கொண்டாடினார்களாம். இவையெல்லாம் இயக்குனர் சுந்தர் சி யை பெருமகிழ்ச்சி வாழ்த்தியதாக குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

சாதாரண மனிதனையும் தூக்கி விடுவது ரசிகர்கள் தான் என்று ரசிகர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்சி. ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு யாருமே பெரிய நடிகனாக முடியாது என்பதைத்தான் இயக்குனர் சுந்தர் சி அவருடைய பேட்டியில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular