சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகப்பெரிய நடிகர் என்றுதான் இவ்வளவு நாள் நாம் நினைத்திருந்தோம் .ஆனால் அவருக்குள் ஒரு இயக்குனரும் ,திரைக்கதை எழுத்தாளரும் இருக்கிறார் என்பதை நடிகர் சரத்குமார் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய ஒரு பேட்டியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார் .அதில் அவரிடம் தொகுப்பாளர் கோபிநாத் உங்களுக்கு நீங்கள் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கதையை கூறியதாக சொல்கிறார்களே உண்மையா என்று கேட்டார்.
ஆமாம் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை கூறினார் என்று கூறிய சரத்குமார் அந்த கதையை சொல்ல தொடங்கினார் ஓபனிங் இல் ஒரு ஹார்பரை நோக்கி ஐந்தாறு கார்கள் வரிசையாக வேகமாக வருகிறது. அப்பொழுது ஒரு லேம்புக்கு கீழ் நடிகர் சரத்குமார் கிழிந்த துணியுடன் அமர்ந்து கொண்டு சிகரட்டை பத்த வைப்பார். அந்த வெளிச்சத்தில் உங்கள் முகம் தெரியும் என்று நடிகர் சரத்குமார் உடைய இன்ட்ரொடக்ஷனை கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அதைத்தொடர்ந்து அப்படி பற்ற வைத்து நிமிரும் பொழுது காரில் ஒருவரை காண வேண்டும் .அப்படியே அடுத்து சீன் ஒரு போலீஸ் கான்பிரன்ஸ் நடந்து கொண்டிருக்கும் பொழுது நிறைய போலீஸ்களுக்கு மத்தியில் நடிகர் சரத்குமார் வந்து அடுத்தடுத்து நடக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்வது போன்று அதன் பிறகு இருப்பவர்கள் இவர் யார் எப்படி இதையெல்லாம் கூறுகிறார் என்று சலசலப்பு அது போன்று அந்த காட்சி அமையும் .
இவர் பெரிய போலீஸ் அதிகாரி சில காரணத்தினால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் .ஆனால் இவர் கூறுவதை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவதாகவும் அதன் பிறகு அந்த ஊரில் நிறைய பாம் பிளாஸ்டு பிரச்சனைகள் என்று நடந்து வருகிறது அதை தடுப்பதற்கு லண்டனில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலீஸ் குழுவினர்கள் இறக்குகிறார்கள் ஹெலிகாப்டரின் கெத்தாக வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்குவது தான் அவருடைய introduction என்றும் கூறியிருந்தார் .
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகு சரத்குமார் எங்கே என்று கேட்டு அவருடைய மூளையும் என்னுடைய மூளையும் இணைந்தால் தான் இதை வெற்றி பெற முடியும் என்று கூறி அதன் பிறகு இருவருமாக சேர்ந்து அந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவது போன்று இந்த திரைப்படம் அமைந்திருக்கும். இப்படித்தான் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை கூறினார்.
மேலும் இந்த திரைப்படத்தை பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து தான் இயக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால் சில பல காரணங்களால் அது நடக்காமல் போகிவிட்டது என்று நடிகர் சரத்குமார் கூறியிருந்தார்.
அதைப்போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய இந்த திரைக்கதையில் தற்பொழுது யாரேனும் இயக்கினால் சூப்பர் ஸ்டாருக்கு காப்பிரைட் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் சரத்குமார் குறிப்பிட்டிருந்தார்.