நான் ‘பாபா’ படம் செய்றேன்னு சொன்னதும் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்குனு சொன்னாங்க ஆனால், எனக்கு டென்ஷனா இருக்கு மூன்று வருடம் கழித்து படம் செய்றோம். அது எல்லோரையும் சந்தோஷப்படுத்தக் கூடிய வகையில் நல்லா வரணும் என்ற நினைப்புள டென்ஷனை அதிகமா ஏற்படுத்திக்கிட்டிருக்கு. மூன்று வருடமா படம் செய்யாமல் இருந்துட்டு திடீர்னு பூஜை போட்டு படத்தை துவங்கியதுமே டென்ஷனாயிடுச்சு. கல்கத்தா ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுடன் ஆடும்போது இந்திய கிரிக்கெடவீரர்களுக்கு என்ன டென்ஷன் இருக்குமோ அதைவிட அதிகமாக டென்ஷன் இருக்கு.
இயக்குனர் ஷங்கர் பேசும்போது ‘பாபா’ படத்தின் அவுடவைன் எனக்கு தெரியும். பிரமாதமான கதை நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றார். படத்தின் அவுட்லைன் மட்டுமல்ல முழுகதையும் ஷங்கருக்கு தெரியும். நான் அவரிடம் பாதிக் கதைதான் சொன்னேன். அவர்தான் முழுக்கதையாக்கினார். அவரையே படத்தை இயக்க வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர் ‘பாய்ஸ்’ படத்தை இயக்க ஒப்புக்கொண்டதால் என் படத்தை இயக்க முடியாமல் போனது. ஷங்கர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையை படமாக எடுத்தால் நிச்சயம் 50 வாரம் போகும் செலவு 50 கோடியாகும் இரண்டு வருடம் பிடிக்கும்.அதனால் படத்தை செய்யவில்லை.
என் குருநாதர் பாலாச்சந்தர் கலகலப்பாக படம் எடுக்கவேண்டும் என்று திடீரென்று ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை துவங்கினார். அதே போலதான் இந்தப் படத்தையும் ஷங்கர் துவங்கியிருக்கிறார்.
நான் ‘படையப்பா’ படக் கதையை ஷங்கரிடம் சொன்னேன். அதே போல ‘பாபா’ படத்தின் கதையையும் ஷங்கரிடம் சொன்னேன். ஆனால், அவர் ‘பாயஸ்’ படக் கதையை என்னிடம் இன்னும் சொல்லவில்லை.
‘பாபா’ ஷூட்டிங் இருப்பதால் இந்த படத்துவக்க விழாவில் கலந்துகொள்ள முடியாது என்றேன். இதில் நடிக்கும் எல்லோரும் புதியவர்கள் என்பதால் அவர்களை என்கரேஜ் செய்யணும் என்று நானும் வந்து கலந்துகொண்டேன்.
நான் படம் துவங்கியதால் தமிழ் இன்டஸ்டரி காப்பாற்றப்படும் என்றெல்லாம் பேசுறாங்க இன்டஸ்டரீயை காப்பாற்ற நான் யார் ? புரொட்யூசர் நல்ல கதையை படமாக்கி அவரை காப்பாத்திக்கிடனும் ,டிஸ்டரிபியூட்டா அவரை காப்பாத்திக்கணும், தியேட்டர்காரர் அவரை காப்பாத்திக்கணும் ,டெக்னிஷியன் அவரை காப்பாத்திக்கணும், நட்சத்திரங்கள் அவர்களை காப்பாத்திக்கிடணும் இப்படி ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டால் சினிமா இண்டஸ்ட்ரி நிச்சயம் நல்லா இருக்கும்.
ஏழை, பணக்காரர்களிடம் சந்தோஷமில்லை! அறிவாளி புத்திசாலிகளிடம் சந்தோஷமில்லை! வயதானவர்கள், இளஞர்களிடையே சந்தோஷமில்லை! சம்சாரி, பிரம்மச்சாரியிடமும் சந்தோஷமில்லை! எதில சந்தோஷமிருக்குன்னா செய்யும் தொழிலில்லதான் சந்தோஷம் இருக்கு. பொறுப்புடனும், உண்மையுடனும் தொழிலை செய்தால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்.
தியேட்டர்களில் கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்று பல முறை வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த வலியுறுத்தலை ஏற்று தமிழக முதல்வர் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணததை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது பாராட்டிற்குரியது. அதற்காக தமிழ்நாடு அரசிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.