Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ! சூர்யா 42 புதிய போஸ்டர் அப்டேட்.. !

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ! சூர்யா 42 புதிய போஸ்டர் அப்டேட்.. !

விஜய்யின் லியோ, அஜித் 62, ஜெயிலர், இந்தியன் 2, பொன்னியின் செல்வன், மாவீரன், கேப்டன் மில்லர் என பெரிய நட்சத்திரங்களின் வரிசையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. இயக்குனர் சிவா தலைமையில் சூர்யா, திஷா பத்தானி ஜோடியா நடிக்கும் இப்படம் ஷூட்டிங்கில் இருக்கிறது.

- Advertisement -

போர்க்காட்சிகள் கொண்ட ஓர் வரலாற்று கதை இப்படம். படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகள் மிகவும் அதிகம், அதானல் ஹாலிவுட்டில் இருந்து தரமான எடிட்டர்களை படக்குழு இறங்கியுள்ளது. 10 மொழிகளில் 3டி-யிலும் வெளியாகவுள்ளது இந்த படத்தின் முன் வியாபாரம் லியோ, பொன்னியின் செல்வன் படங்களை விட மிகவும் அதிகம்.

தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் அப்டேட் எப்போது என மற்ற ரசிகர்களை போல சூர்யாவின் ஆதரவாளர்களும் கேட்டுக் கொண்டே இருந்தனர். நான்கு தினங்களுக்கு முன் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்கியது.

- Advertisement -

அதாவது வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9:05 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் ரீலீஸ் தேதி வெளியாகும். அதற்கு முன் சர்ப்ரைஸாக இன்று மாலை 5 மணிக்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். பலத்த இடிக்கு நடுவில் போர் வீரன் குதிரையில் விரைந்து செல்வது போல போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தது. கபிலன் எடிட் செய்த இந்த போஸ்டர் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

- Advertisement -

வழக்கமாக சென்டிமென்ட் பாணியில் படம் எடுக்கும் சிவா இம்முறை வரலாற்று கதையில் பணியாற்றுகிறார். அவரின் இந்த பிராஜெக்ட் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. படத்தின் தலைப்பு ‘ அக்னீஸ்வரன் ’ என சில் வதந்திகள் பரவியுள்ளன. அது உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தை பண்டிகை தினங்களில் வெளியிடவே படக்குழு எண்ணும். இந்த வருடப் பண்டிகை தினங்களில் மற்ற பெரிய படங்கள் வரவிருப்பதால் பொங்கல் 2024 சூர்யா 42 படத்தை எதிர்பார்க்கலாம்.

Most Popular