சினிமா

6 ஆண்டுகளுக்குப் பிறகு விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா ! இயக்குனர் யார் தெரியுமா ?

Actor Surya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் சூர்யா. தொடக்க காலங்களில் சுமாரான வெற்றகளை பெற்று வந்த சூர்யா, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இயக்குனர் பாலாவுடன் இணைந்து, தன்னை ஒரு தனித்துவமான நடிகராக நிலைநிறுத்தி கொண்டார். நந்தா, பிதாமகன், பேரழகன் , கஜினி, காக்க காக்க போன்ற படங்கள் மூலம், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து தனக்கு என்று ரசிகர்களை உருவாக்கியவர் சூர்யா

2007ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்த நிலையில், சூர்யா மட்டும் தொடர்ந்து மெகா ஹிட் படங்களில் நடித்து, வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார். தாம் தொட்டது எல்லாம் தங்கமாக, வட இந்திய ஊடகங்கள் சூர்யாவை சூப்பர் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினர்.

Advertisement

இதன் பின்னர் சூர்யாவின் சிங்கம் திரைப்படம், பாலிவுட்டிலும் ரீமேக் ஆனது. இப்படி சூர்யாவின் கேரியர் ஏறுமுகத்தில் செல்ல, ஒரு கட்டத்தில் சரிவை சந்திக்க தொடங்கியது. சிங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், அதன் பிறகு வெளிவந்த சூர்யாவின் படங்கள் அனைத்திலும் சிங்கம் சாயல் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வந்த திரைப்படங்களான அஞ்சான், மாசு, மாற்றான் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. அதன் பின்னர் சூர்யா தனது டிராக்கை மாற்றி கொண்டார். ஆக்சன், கமர்சியல் பாதைகளிலிருந்து விலகி மீண்டும் வித்தியாசமான கதைக் களத்தையும், திறமையான இயக்குனர்களுடனும் சூர்யா கைக் கோர்த்துள்ளார்.

Advertisement

சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து மீண்டும் தனது இருப்பை சூர்யா பதிவு செய்து கொண்டார். ஆனால் கொரோனா காலக் கட்டம் என்பதால், இவ்விரு படங்களும் ஓடிடியில் வெளியாகின. இதனால் திரையரங்குகள் மூலம் கிடைக்க பெற வேண்டிய வசூல் மிஸ் ஆனது. இந்த நிலையில், தற்போது மீண்டும் புது முயற்சிகளை எடுக்க கூடிய இயக்குனர்களுடன் சூர்யா கைக் கோர்த்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முதல் டைம் டிராவல் படமான நேற்று இன்று நாளை மற்றும் சிவகார்த்திக்கேயனை வைத்து அயலான் போன்ற படங்களில் இயக்கியுள்ள ரவிகுமாருடன் சூர்யா இணைந்துள்ளார். இந்த படஙகளில் சூர்யா விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் சூர்யா விஞ்ஞானியாக 24 என்ற படத்தில் நடித்து, அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது சூர்யா மீண்டும் விஞ்ஞானியாக சூர்யா நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top