Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா 43 திரைப்படத்தின் அப்டேட்ஸ்கள் ..! படப்பிடிப்பு எப்போது..?

சூர்யா 43 திரைப்படத்தின் அப்டேட்ஸ்கள் ..! படப்பிடிப்பு எப்போது..?

நடிகர் சூர்யா தற்பொழுது கங்குவா திரைப்படத்தின் வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் .இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் கங்குவா வருகின்ற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதல் திரைப்படமாக வெளியிட வேண்டும் என்று அதற்கான பணியை தீவிர படுத்திருக்கிறார்கள் பட குழுவினர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்கள் வெளியாகி இருக்கிறது . நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதாகங்குரா தற்பொழுது சூர்யாவை 43-வது திரைப்படத்தில் இயக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் திரைப்படத்தின் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகர் துல்கர் சல்மான், மாதவன் ,விஜய் வர்மா போன்ற பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் .இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரக்கூடிய மார்ச் மாதம் நடுவில் துவங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை மதுரையில் தொடங்கி திருச்சி, சிதம்பரம் மற்றும் ஹரியானாவில் உள்ள விவாரி போன்ற இடங்களில் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

அதே சமயம் நடிகர் சூர்யா தற்பொழுது கங்குவா திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் இருப்பதால் தற்பொழுது சூர்யா 43 திரைப்படத்தின் படப்பிடிப்பிலும்  கங்குவா திரைப்படத்தில் டப்பிங் வேளையிலும் ஒரே சமயத்தில் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தன்னுடைய 43 வது திரைப்படத்தில் கல்லூரி மாணவனாகவும் சில காட்சிகளின் நடிக்க இருப்பதால் அதற்காக தன் உடலை குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாகும்.

சுதா கங்குரா மற்றும் சூர்யாவின் காம்போவில் வெளிவந்த சூறரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தால் பெரும் வசூல் வேட்டை அடைத்திருக்கும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular