Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாசூரரைப் போற்று தொடர்பாக சூர்யா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

சூரரைப் போற்று தொடர்பாக சூர்யா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

திரையரங்குகள் இயக்கப்படாத கொரோனா காலகட்டத்தில் ஓ டி டிக்களின் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்றி திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் அந்த வருடத்தின் மாபெரும் வசூலை பெற்று வெற்றி அடைந்திருக்கும். அந்த அளவிற்கு ஒரு நல்ல கதைக்களம் அந்த திரைப்படத்தில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் ,சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த இசை அமைப்பாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது.

- Advertisement -

தமிழில் இந்த திரைப்படம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கங்குரா பாலிவுடில் முன்னணி கதாநாயகரான அக்ஷய் குமாரை வைத்தது ஹிந்தியில் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்து திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது

இந்தத் திரைப்படத்திற்கு ஹிந்தியில் ஸ்டார்ட் அப் என்று பெயர் இடப்பட்டிருக்கிறது.  இந்த திரைப்படத்திற்கு தமிழில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமார் தான் ஹிந்தியிலும் இசை அமைத்திருக்கிறார்.

தமிழ் ரசிகர்களை வென்றது போல இந்த திரைப்படம் ஹிந்தியிலும் வெற்றி பெறுமா என்று திரைப்படம் வெளிவந்த பிறகு தான் தெரியும் .

இத்திரைப்படத்தின் கதை மிகச் சிறப்பாக இருந்தாலும் அதில் நடிகர் சூர்யாவின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது. அதேபோல் அக்ஷய் குமார் அவருடைய சிறப்பை இந்த திரைப்படத்தில் காட்டி இருந்தால் இதே அளவிற்கு நல்ல வெற்றியை பெரும். மேலும் தமிழில் சூழரைப் போற்றி திரைப்படம் பெறாத திரையரங்கு வசூலை ஹிந்தியில் பெருமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Most Popular