Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் விஜய், அஜித்துக்கு போட்டியாக சூர்யா.. விரைவில் மாஸ் அப்டேட்

மீண்டும் விஜய், அஜித்துக்கு போட்டியாக சூர்யா.. விரைவில் மாஸ் அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது சூர்யா தான்.  ஒரு காலத்தில் 2007 ஆம் ஆண்டு பிற்பகுதி முதல் 2010 ஆம் ஆண்டு வரை விஜய், அஜித் என இருவருக்கும் படம் சரியாக போகாத நிலையில் சூர்யாவின் படம் தான் வசூலை வாரி குவித்தது. எனினும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத சூர்யா கடந்த 7 ஆண்டுகளில் சறுக்களை சந்தித்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்திற்காக தற்போது மும்முரமாக ஷூட்டிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட் காத்திருக்கிறது. சிங்கம் 3 படத்திற்குப் பிறகு தொடர்ந்து சுமாரான வெற்றியை பெற்று வந்த சூர்யாவின் திரை வாழ்க்கையில் சுரரைப் போற்று திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

ஆனால் துரதஷ்டவசமாக அந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் ஓடிட்டியில் வெளிவந்தது. இந்த நிலையில் தான் சூர்யாவின் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியே வந்துள்ளது. அதாவது சூரறை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தற்போது சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றில் இயக்க உள்ளார். இது கேங்ஸ்டர் கதை என்பதால் படம் பட்டாசாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்குகிறது. ஏற்கனவே சூர்யா வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் படத்திலிருந்து விலகி விட்டதாக செய்தி வெளியானது சூர்யாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது .

- Advertisement -

தற்போது புத்தாண்டு தொடக்கத்திலேயே சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஜெய் பீம் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை, அயலான் படங்களை இயக்கிய ரவிக்குமாருடன் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கு நடுவில் மாஸ் இயக்குனர் ஹரி படத்திற்கும் சூர்யா ஒப்புதல் அளித்திருக்கிறார். இதைத் தவிர்த்து லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திர படத்திற்கும் சூர்யா நடிக்க இருக்கிறார். இதனால் தொடர்ந்து திறமையான இயக்குனர்களுடன் சூர்யா இணைவதால் 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு சூர்யாவுக்கு பட்டாசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular