Monday, May 13, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா பிறந்தநாள் அன்று காத்திருக்கும் சப்ரைஸ்..! வேற லெவலில் இருக்கும்

சூர்யா பிறந்தநாள் அன்று காத்திருக்கும் சப்ரைஸ்..! வேற லெவலில் இருக்கும்

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்யக்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.தற்போது நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு முடிவடைகிறது. இதன் பிறகு நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறி வாடி வாசலை தள்ளி போட்டு விட்டார்.

- Advertisement -

இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா தற்போது சுதா கொங்குவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23ஆம் தேதி வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தை முன்னிட்டு நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனம் கங்குவா திரைப்படத்தின் வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்ய இருக்கிறது.

அதில் சுமார் 2000 மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் சூர்யாவின் லுக் மற்றும் படத்தின் கதை தொடர்பாக ஒரு ஐடியா ரசிகர்களுக்கு கிடைக்கும் வகையில் அந்த வீடியோ இடம்பெற்றிருக்கும். சூர்யா திரைப்பட வாழ்க்கையில் இது மிகவும் வித்தியாசமான கதையாகவும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இயக்குனர் சிறுத்தை சிவா இந்த வீடியோவை அமைத்திருக்கிறார்.

இது சூர்யா பிறந்தநாளுக்கு பரிசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் வெளியிடப்பட குழு முடிவெடுத்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மிகப்பெரிய திரைப்படமாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது.

Most Popular