சினிமா

” 2 வருடங்களுக்கு வாடிவாசல் திரைப்படத்தை தள்ளிப் போடுங்கள் ” சூர்யா அதிரடி முடிவு – காரணம் இதுதான்

Surya and Vetrimaaran Vaadivaasal

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இணைந்து பணியாற்ற உள்ள திரைப்படம் வாடிவாசல். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படத்திற்கு புது சிக்கல் உருவாகியுள்ளது. நடிகர் சூர்யா கோலிவுடில் தற்போது மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் ஆக நடித்ததன் மூலம் லோகேஸ் சினிமாட்டிக் யூனிவர்சில் தானோஸ் போன்ற வில்லனாக மாறிவிட்டார் சூர்யா..

இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கான வேலையை நடிகர் சூர்யா தொடங்கினார். மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியும் மேற்கொண்ட சூர்யா, தனது சொந்த ஊரில் காளைகளுடன் சூர்யா ஜல்லிக்கட்டு பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டார் . சென்னையில் வாடிவாசல் படத்திற்கான ஜல்லிக்கட்டு காட்சி கூட படமாக்கப்பட்டது.

Advertisement

இதனால் வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் திடீரென்று சூர்யா பாலா இயக்கத்தில் ஒரு படத்தின் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். அதன் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றன . இது தவிர சிறுத்தை சிவா விடம் கதை கேட்டு அதிலும் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் .அதன்பிறகு ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா கைகோர்க்க இருக்கிறார். இதற்கு இடையே அயலான் பட இயக்குனர் ரவிக்குமாருடன் ஒரு படத்தில் சூர்யா இனைய உள்ளார் . தொடர்ந்து அடுக்கடுக்கான திரைப்படங்களை சூர்யா கைவசம் வைத்திருந்தாலும் , வாடிவாசல் என்ன ஆனது என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

வாடிவாசல் திரைப்படம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இப்போதுதான் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது சூர்யா வேறு படங்களுக்கு நடிக்கச் சென்றதால் அந்தப் படத்தின் நிலை என்ன ஆனது என்ற கவலை சூர்யா ரசிகர்களிடையே இருந்தது . இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படம் இன்னும் முடியவில்லை. அதன் படபிடிப்பு நிறைவு செய்ய தாமதம் ஆகலாம் என தெரிகிறது.

Advertisement

மேலும் வெற்றிமாறன் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனால் வாடிவாசல் திரைப்படம் மேலும் 2 ஆண்டுகள் தள்ளிப்போக உள்ளது. இதற்கு காரணம் சூர்யா ஜல்லிக்கட்டு பயிற்சி எடுத்தபோது தான் முழு விச்சு தயாராக இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்று கருதியதாக தெரிகிறது . வாடிவாசல் படத்தில் தத்துரூபமாக நடிக்க வேண்டும் என்பதால் தாம் எடுத்த பயிற்சி போதாது என்று சூர்யா கருதுகிறார். மேலும் பயிற்சியில் ஈடுபட நேரம் தேவைப்படுவதால் வாடிவாசல் படத்தை தள்ளி வைக்கலாம் என சூர்யா வெற்றிமாறன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top