சினிமா

சூரரைபோற்று போல் மீண்டும் ஒரு பயோபிக்கில் சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. எனினும் அந்தப் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாததால் பெரும் ஏமாற்றத்தை சூர்யா ரசிகர்கள் சந்தித்தனர். இந்த நிலையில் மீண்டும் அதே போல் ஒரு பயோப்பிக்கில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சூரரை போற்று பெற்ற வெற்றி அடுத்து இந்த முடிவை நடிகர் சூர்யா எடுத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராஜன் பிள்ளை என்ற தொழிலதிபரின் வாழ்க்கையை சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியின் நிறுவனரான ராஜன் பிள்ளை வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் படமாக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான ப்ரீத்திவிராஜ் இயக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தான் அண்மையில் இருவரும் சந்தித்துக் கொண்டு புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். தற்போது சூர்யா 42 படம் மும்முரமாக நடைபெற்று வருகிறது .அது முடிந்தவுடன் சூர்யாவை வைத்து ராஜன் பிள்ளை கதையை நடிகரும், இயக்குனரமான பிரித்விராஜ் இயக்க உள்ளார்.

Advertisement

ராஜன் பிள்ளை வாழ்க்கை பல்வேறு திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது.ஹாவார்ட் பிசினஸ் ஸ்கூலில் பயின்று நாடு திரும்பிய ராஜன் பிள்ளை பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனிக்கு துணைத் தலைவராக இருந்தார். கோடி கணக்கில் சம்பளம் கிடைக்கும் தனது வேலையை விட்ட ராஜன் பிள்ளை, தனியாக ஒரு பிஸ்கட் கம்பெனியை தொடங்கினார்.

இதனால் தொழில் போட்டி ஏற்படவே இவர் பணிபுரிந்த நிறுவனம், ராஜன் பிள்ளையை பழிவாங்கியது. இதற்காக பல்வேறு வழக்குகள் போட்டு அவர் மீது பொய் புகார் சுமத்தி சிறையில் அடைத்தது. இதனால் ஏற்பட்ட இழப்பின் காரணமாக ராஜன் பிள்ளை தன்னுடைய நிறுவன பங்குகளை விற்று வெளியேறினார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் போது ராஜன் பிள்ளை மர்ம நபர்களால் கொல்லப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு தொழில் போட்டியில் மற்றொருவரை அழிப்பார்கள் என்பதை மையமாக ராஜன் பிள்ளை திரைப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த கதை சூர்யாவுக்கு சரியாக இருக்குமா என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இன்னும் இந்த படத்திற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. வெறுரும் ஆரம்ப கட்டத்திலே இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top