சினிமா

இயக்குனர் ஷங்கருடன் கைகோர்க்கும் ரோலக்ஸ் ! மகிழ்ச்சி கடலில் சூர்யா ரசிகர்கள்

Shankar and Surya

விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 10 நிமிடம் கவுரவ தோற்றம் அளித்து திரையரங்கை அதிர வைத்தார் ரோலக்ஸ். சூர்யாவின் இந்த கேரக்டர் மக்களால் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்று பெரும் புகழுக்கு ஆளாகியுள்ளார் சூர்யா.

இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். அவரின் கையில் தற்போது இரு படங்கள் உள்ளன. முதலில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2. இப்படத்தின் ஷூட்டிங் பல சிக்கல்களுக்குப் பின் ரெட் ஜெயன்ட் உதவியால் அடுத்த மாதம் தொடங்குகிறது. இரண்டாவதாக ராம் சரனை வைத்து இயக்கும் படம்.

Advertisement

ராம் சரணின் 50வது படமான இதற்கு இன்னும் படக்குழு பெயரிடவில்லை. தற்காலிகமாக ஆர்.சி 50 என அழைக்கப்படுகிறது. சுமார் 170 கோடி செலவில் இந்த திரைப்படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் ஏற்கனவே தொடங்கி பாதியில் நிற்கிறது. ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் தேவதை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நாசர், ஜெயராம், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது படக்கிழுவிடம் இருந்து ஓர் சூடான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா அவர்கள் ஷங்கர் இயக்குனர் இந்த படத்தில் சிறப்பு தோற்றம் அளிக்கவுள்ளதாக கூறுகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற விருமன் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கரும் சூரியாவும் ஒன்றாக காணப்பட்டனர். அப்போது தான் இந்த தகவல் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மக்களால் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவை பாலாவுடன் வணங்கான், வெற்றி மாரணுடன் வாடிவாசல். அதோடு மீண்டும் சுதா கோங்ராவுடன் மீண்டும் இணையுள்ளார். இதைத் தொடர்ந்து ஷங்கரின் ஆர்.சி 50வது படத்தில் ஓர் சிறப்புத் தோற்றம். விக்ரம் படத்தைப் போலவே இதிலும் 10 நிமிடம் முக்கிய வேடத்தில் சிறப்பித்து ரசிகர்களின் கைதட்டல்களையும் விசிலையும் பெறவுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top