தமிழ் சினிமாவில் பம்பரம் போல் சுழன்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் ஆக நடித்த சூர்யா தற்போது ஏராளமான ப்ராஜெக்ட்டில் நடித்து வருகிறார்.
பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இது தவிர சிறுத்தை சிவா விடம் கதை கேட்டு அதிலும் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் .அதன்பிறகு ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் சூர்யா கைகோர்க்க இருக்கிறார்.
இதற்கு இடையே அயலான் பட இயக்குனர் ரவிக்குமாருடன் ஒரு படத்தில் சூர்யா இனைய உள்ளார் . மேலும் இயக்குனர் லிங்குசாமியுடன் படத்திற்கான ஓன் லைனை சூர்யா கேட்டு ஓகே செய்துள்ளார். இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வாடிவாசல் திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரைடஜன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சூர்யா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபல இயக்குனருடன் ஜோடி சேர உள்ளார்.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் மாதவனை வைத்து 13 பி என்ற படத்தை எடுத்தவர் விக்ரம் குமார். ஹை டெக்கான கதையை கமர்சியலாக சொல்லும் இயக்குனரான விக்ரம் குமார். நடிகர் சூர்யாவை வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு 24 என்ற திரைப்படத்தை இயக்கினார். டைம் ட்ராவல் வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோ, வில்லன் உள்ளிட்ட மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அஞ்சான், மாஸ் போன்ற திரைப்படங்கள் சூர்யாவுக்கு தோல்வியை தந்த நிலையில் 24 அவரது திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் விக்ரம் குமார், சூர்யா ஜோடி மீண்டும் இணையவுள்ளது. சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் எடுக்க உள்ள விக்ரம் குமார், இம்முறையும் ஹைடெக்கான கதையை வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க உள்ளார். தொடர்ந்து திறமையான இயக்குனர்களுடன் சூர்யா இணைவதால் அவர் மீண்டும் டாப் நடிகர்களுக்கு போட்டியாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
