சினிமா

மீண்டும் பிஸியான தமிழ் சினிமா.. கோடிகளை அள்ளும் திரையரங்கு உரிமையாளர்கள்

உலகநாயகன் நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூர்யா பகத் பாஸில் என்று பல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களும் வெற்றி அடைந்தது இது இந்த ஆண்டின் ஒரு சிறந்த படமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

Advertisement

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படங்கள் எல்லாம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு நல்ல படைப்பாக எந்த திரைப்படமும் அமையவில்லை. ஆனால் தற்பொழுது இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதி சங்கரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் இந்த நிலையை மாற்றி அமைத்தது. இது ஒரு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது .இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான இந்த திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி அடைந்துள்ளது.

மேலும் இதை தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் நான்கு நாட்களிலேயே 30 கோடி வசூலை வேட்டையாடி உள்ளது. இந்தத் திரைப்படத்தை காண இரவு பகல் பாராது ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நடு ஜாமத்தில் கூட திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆக இருந்து வருகிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் குடும்பங்களாக பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படமாக அமைந்திருக்கிறது.

Advertisement

இவற்றைத் தொடர்ந்து இந்த மாதம் 31ஆம் தேதி அஜய் ஞான மூர்த்தியின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் கோபுரத் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்பதால் நிச்சயம் இந்த திரைப்படத்தின் பாடல்களும் வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு வருடத்திற்கு முன்பு இணையதளங்களில் வெளியான தும்பித்துள்ளல் என்ற பாடல் 2020 ஆம் ஆண்டின் ஒரு சிறந்த பாடலாக அமைந்தது.

மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படைப்பாக நடிகர் ஜெயம் ரவி கார்த்திக் விக்ரம் ஜெயராம் பார்த்திபன் பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யாராய் த்ரிஷா சரத்குமார் பிரபு என்று நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் மாதம் முப்பதாம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.ஏற்கனவே இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உடைய இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு சற்று சோர்வடைந்திருந்த கோலிவுட் சினிமா தற்பொழுது இந்த திரைப்படங்களால் சூடு பிடித்துள்ளது. இன்னும் இயக்குனர் சிறுத்தை சிவாவினுடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா சூர்யா 42 என்று திரைப்படத்தை நடிக்க இருக்கிறார் அதற்கான படப்பிடிப்பு இன்றிலிருந்து துவங்க உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தின் படபிடிப்பு நாளை தொடங்குகிறது. இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் உடைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top