Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாஓவர் திமீர்! படபிடிப்பில் தேவயானியை லெப்ட், ரைட்டுனு வாங்கிய மணிவண்ணன்.. என்ன நடந்தது?

ஓவர் திமீர்! படபிடிப்பில் தேவயானியை லெப்ட், ரைட்டுனு வாங்கிய மணிவண்ணன்.. என்ன நடந்தது?

பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன், நடிகை தேவயானியை படப்பிடிப்பில் கடுமையாக திட்டிய சம்பவம் நடந்ததாக இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நடிகையாக தேவயானி வலம் வந்தார்.

- Advertisement -

தேவயானிக்கு அப்போதெல்லாம் படம் குவிந்து வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தேவயானி உடன் மணிவண்ணன் காதல் கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார். அப்போது முரளியுடன் ஒரு படத்தில் தேவயானி நடித்துக் கொண்டிருந்தபோது புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ எடுப்பதற்காக நடிகை தேவயானியின் பெயரை சொல்லி கொஞ்சம் நகருங்கள் என்று கூறினார்.

இதை பார்த்த தேவயானி கடுப்பாகி விட்டாராம். ஒரு சாதாரண போட்டோகிராபர் எப்படி என் பெயரை சொல்லலாம். அதுவும் ஷூட்டிங்கில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது எவ்வாறு இதை சொல்லலாம்.என்னை மேடம் என்று தான் அனைவரும் அழைக்க வேண்டும். இயக்குனர் மற்றும் கேமரா மேன் ஆகியோரை தவிர அனைவரும் இனி என்னை மேடம் என்று அழையுங்கள் என்று கூறி சண்டை போட்டாராம்.

- Advertisement -

அப்போது நடிகர் முரளி கூட சென்று சமாதானப்படுத்தினாராம். இந்த சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு நடிகர் மணிவண்ணன் ஷூட்டிங் வந்தாராம். அப்போது இந்த தேவயானி பொண்ணு எங்கப்பா? உடனே கூப்பிடுங்க என்று அழைத்தார். தேவயானி மணிவண்ணன் ஆகியோர் ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்ததால் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்ததாம்.

- Advertisement -

அப்போது தேவயானி அழைத்து அம்மா ஏதோ ஒரு புகைப்படக் கலைஞர் உன் பெயரை சொன்னதுக்கு திட்டினாயாமே? பெயர் என்றால் கூப்பிடத்தானே வைத்திருக்கிறார்கள். இல்லை பிறக்கும்போது உன் பெயரை இவர்கள்தான் கூற வேண்டும். இவர்கள் கூறக்கூடாது என்று ஏதேனும் சட்டம் போட்டார்களா?

என்னை பலரும் மணிவண்ணன் சார் என்பார்கள், சிலர்  மணிவண்ணன் வந்துட்டான் டா என்று சொல்வார்கள்.அப்போது என்னை ‘டே’ சொல்லி கூப்பிடுவார்களை எல்லாம் அழைத்து நான் மன்னிப்பு கேட்க வைக்க முடியுமா?

நீ வளரும் நடிகையாக இருக்கிறாய். உனது பெயரை பலரும் கூப்பிட்டால் தானே, நீ இன்னும் வளருவாய் உன்னுடைய பெயர் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது நீ எப்படி இது போல் கூறினாய்? நியாயமாக, நீ தான் அந்த புகைப்படக் கலைஞரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது அந்த புகைப்படக் கலைஞர் எடுத்த ஆல்பம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததாம், அதனைப் பார்த்த தேவயானி இவ்வளவு திறமையான கலைஞரை நாம் இப்படி திட்டி விட்டோமே என்று கூறி அனைவரும் முன்பும் நான் தவறு செய்து விட்டேன் மணிவண்ணன் சார் தான் நான் செய்த தவறை புரிய வைத்தார். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். சாரி! என்று கூறினார். இந்த தகவலை அந்தப் படத்தின் இயக்குனரானம் களஞ்சியம் தெரிவித்திருக்கிறார்.

Most Popular