Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபம்பரம் போல் சுழலும் லோகேஷ் கனகராஜ் ! அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தம்

பம்பரம் போல் சுழலும் லோகேஷ் கனகராஜ் ! அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தம்

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்துள்ளார்.மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது குருநாதரான கமலுடன் இணைந்து பணியாற்றிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது மட்டும் தமிழ்நாட்டில் 182 கோடி ரூபாய் வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் ஈட்டி உள்ளது.ஒட்டுமொத்தமாக 443 கோடி விக்ரம் வசூல் செய்துள்ளது. ஓ டி டி தளத்தில் விக்ரம் ரிலீஸ் ஆன பிறகும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது.

- Advertisement -

இதனால் லோகேஷ் கனகராஜன் மார்க்கெட் தற்போது எகிறியுள்ளது.அனைத்து முன்னணி நடிகர்களும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என போட்டி போட்டு வருகின்றனர். தற்போது விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். அதற்கு காரணம் அவரது குருநாதரான கமலஹாசன் சொன்ன அறிவுரை தான். வெற்றிக்கு பிறகு நீண்ட ஓய்வு எடுக்கக் கூடாது என்றும், அடுத்த வாரத்தில் அடுத்த படத்திற்கான பணியை தொடங்க வேண்டும் என லோகேஷ்க்கு செல்லமாக கமல்ஹாசன் கட்டளையிட்டார்.

இதனை கேட்டுக் கொண்ட லோகேஷ், தற்போது அடுத்த படங்களுக்கான பணியை தொடங்கி விட்டார். தற்போது தளபதி 67 படத்திற்காக திரைக்கதையை செதுக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ், ரத்தினகுமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மேலும் 3 படங்களில் பணியாற்ற ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்திற்காக செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் பணியாற்றுகிறார். இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியார் நிறுவனம் லோகேஷனை வைத்து கைதி 2 எடுக்க முடிவு எடுத்துள்ளது.

- Advertisement -

இதேபோன்று நடிகர் கமலின் ராஜ் கமல் நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் மைத்திரி தயாரிப்பு நிறுவனத்திற்காக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதேபோன்று நடிகர் லோகேஷ் கனகராஜ் தனது ஊதியத்தையும் உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மாஸ்டர் படத்திற்காக 5 கோடி சம்பளமாக வாங்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் வெற்றிக்கு பிறகு தளபதி 67 படத்திற்காக 20 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. உழைப்பும், ஆர்வமும், தனித்துவமும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு லோகேஷ் கனகராஜ் தற்போது எடுத்துக்காட்டாக உள்ளார்.

Most Popular